தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை முதல்முறையாக சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டு இருக்கிறார். தமிழ் உலகின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கு தனுசுயுடன் திருமணமாகி யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இளையமகள் சௌந்தர்யா. அவருக்கு தற்போது இரண்டாவதாக ஒரு மகன் பிறந்திருக்கிறான். ரஜினிகாந்தின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை ஆரம்பத்தில் கர்நாடகாவில் நடத்துனராக இருந்து பின்னர் இன்று சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார். இவரின் இரு மகள்களும் தந்தை மீது மிகுந்த மரியாதையும் பாசமும் உடையவர்கள். சமீபத்தில் கூட ரஜினியின் 75 ஆவது திரை உலக என்ட்ரியை இருவரும் கேக் வெட்டி கொண்டாடி ரஜினியை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியிருந்தனர்.

மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தனுஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் 17 ஆண்டு கால திருமண வாழ்க்கை சமீபத்தில் முடிவுக்கு வந்ததாக தனுஷ் அறிவித்து இருந்தார . ஆனால் இது குறித்து இன்று வரை ரஜினிகாந்தோ, ஐஸ்வர்யாவோ எந்தவிதமான கருத்தையும் கூறாமல் இருந்து வருகின்றனர். இரண்டாவது மகள் சௌந்தர்யாவிற்கு 2019 ஆம் ஆண்டு விசாகன் என்பவருடன் திருமணம் ஆனது. சௌந்தர்யா ஏற்கனவே தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் ஆகி விவாகரத்து செய்திருந்தார். இந்த நிலையில் விசாகன் என்பவரை மீண்டும் இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு வேத் என்ற மகன் இருக்கிறார். தற்போது இரண்டாவது முறையாக சௌந்தர்யா கர்ப்பமாக இருந்தார்.

கர்ப்பமாக இருந்த அவர் புகைப்பட போட்டோ சூட் ஒன்றை நடத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் மிக வைரலானது. இந்த நிலையில் கடந்த வாரம் அவருக்கு மகன் பிறந்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். மேலும் அவருக்கு “வீர் ரஜினிகாந்த்” என்று பெயர் வைத்துள்ளதாகவும் சௌந்தர்யா கூறியிருந்தார். இந்த நிலையில் தனது இரண்டாவது மகனின் புகைப்படத்தை முதன்முறையாக தனது instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தன் மகனை தூக்கி வைத்துள்ளார் சௌந்தர்யா. பின்னால் தந்தை ரஜினிகாந்த் நின்று பார்த்துக் கொண்டிருப்பது போன்ற அழகிய புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். சௌந்தர்யாவிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
