ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் இணைந்து இன்று திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான ரவீந்தர் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை செப்டம்பர் ஒன்றாம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமி 2007 ஆம் ஆண்டு ஒளிபரப்பான அரசி என்ற சீரியலின் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தவர். இதற்கு முன்பாக இவர் சன் மியூசிக்கில் விஜேவாக பணியாற்றி வந்தார். மகாலட்சுமிக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணம் ஆகி 6 வயதில் குழந்தையும் இருக்கிறது. இதே போல் ரவீந்தருக்கும் திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தது. தற்போது ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ரவீந்தர் தயாரித்து வந்த ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஒன்றை ஆண்டுகளாக காதலித்து அந்த அவர்கள், தற்போது வெளிப்படையாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் திருமணம் குறித்தும், ரவீந்திரரின் உருவம் குறித்தும் பலரும் கேலி செய்த போதிலும், அதை எல்லாம் இவர்கள் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து youtube மற்றும் செய்தி சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். பலரும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியும் திருமணத்தை வாழ்த்தியிருந்தனர். அவர்கள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர். ஆனால் பலரும் தொடர்ந்து மகாலட்சுமி மற்றும் ரவீந்தரின் திருமணத்தை கேலி செய்து வருகின்றனர்..

ஆனால் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் இது போன்ற விமர்சனங்களை பற்றி எல்லாம் கவலைப்படுவதாக தெரியவில்லை. தொடர்ந்து அவர்கள் இன்ஸ்டாகிராமில் காதல் மழையை மாறி மாறி பொழிந்து வருகிறார்கள். தற்போது இருவரும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அங்கு முருகனிடமிருந்து வேல் மற்றும் கொடியை ரவீந்தர் வாங்கும் புகைப்படங்களையும், மனைவி மகாலட்சுமியுடன் இருக்கும் புகைப்படங்களையும் தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
