சமீபத்தில் திருமணம் ஆன ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஜோடியை பிரபல தொலைக்காட்சி ஒன்று அழைத்து “வந்தாள் மகாலட்சுமியே” என்ற பெயரில் ஒரு பெரிய நிகழ்ச்சி ஒன்றே நடத்தியுள்ளது. அதன் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை சமீபத்தில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி. இவர் முதலில் சன் மியூசிக்கல் விஜேவாக தன் பணியை ஆரம்பித்தார். பின்னர் சீரியலில் நுழைந்து தற்போது பல நாடகங்களில் நடித்து வருகிறார். சன் தொலைக்காட்சி மட்டுமல்லாமல் கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் என பல தொலைக்காட்சிகளில் வில்லி கதாபாத்திரங்களிலும், துணை வேடங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.

மகாலட்சுமிக்கு 2019 ஆம் ஆண்டு முதல் கணவருடன் விவாகரத்தானது. அவருக்கு ஆறு வயதில் மகன் ஒருவரும் இருக்கிறார். இந்த நிலையில் தனியே வாழ்ந்து வந்த மகாலட்சுமி ரவீந்தரின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வந்தார். அப்போது அவருக்கும் தயாரிப்பாளர் ரவிந்தருக்கும் காதல் மலர்ந்துள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்கள் திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இவர்கள் பல தனியார் தொலைக்காட்சிகளிலும், youtube சேனல்களிலும் பேட்டியளித்து வந்தனர். இந்த பேட்டிகள் வைரல் ஆனது மட்டுமல்லாமல், மகாலட்சுமி மற்றும் ரவீந்தரை சிலர் ஒருவர் கேலி செய்தும் கிண்டல் செய்தும் பேசி வந்தனர். இவர்கள் குறித்து மீம்ஸ்களும் பறந்து வந்தது. ஆனால் இது எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து இருவரும் பயணித்துக் கொண்டே இருக்கின்றனர்.

இந்த நிலையில் விஜய் டிவி இருவரையும் அழைத்து “வந்தாள் மகாலட்சுமியே” என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறது. அதன் சில காட்சிகள் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் ரவீந்தரும் மகாலட்சுமியும் மணக் கோலத்தில் இருக்கிறார்கள். கழுத்தில் மாலை அணிந்து இருக்கிறார்கள். பின்னர் அவர்களை அமர வைத்து பேட்டி எடுப்பது போன்று வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..
View this post on Instagram