தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தாயார் காலமானார்.! திரையுலகினர் இரங்கல்.!

தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி வயது முதிர்வு காரணமாக இன்று இயற்கை எய்தினார். மகேஷ்பாபு முன்னணி நடிகராக இருந்த கிருஷ்ணாவின் மகனாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக தனது தந்தையின் படங்களில் நடித்து வந்தார். பின்னர் 25 ஆவது வயதில் ராஜகுமாரடு என்ற படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். டோலிவுட் உலகின் சூப்பர் ஸ்டார் மற்றும் சவுத் இந்தியன் பிரின்ஸ் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார் நடிகர் மகேஷ்பாபு. இவருக்கு தெலுங்கில் அதிக அளவு ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தாயார் காலமானார்.! திரையுலகினர் இரங்கல்.! 1

விளம்பரம்

இவர் முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதில் ஒக்கடு திரைப்படம் கில்லி என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. போக்கிரி திரைப்படம் அதே பெயரில் தமிழில் எடுக்கப்பட்டது. மேலும் இவர் இந்தி திரைப்பட நடிகை நம்ரதா ஷிரோத்கரை மணமுடித்துள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் பள்ளிப்படிப்பை சென்னையிலேயே முடித்தார். மேலும் இவர் சூர்யாவின் தம்பி கார்த்தியின் வகுப்புத் தோழர் ஆவார். இவரது தாயார் இந்திரா தேவி கடந்த சில நாட்களாகவே வயது முதிர்வு காரணமாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

தொடர்புடையவை  நமக்கு பிடிச்ச மாதிரி படம் எடுக்க தயாரிப்பாளர் காசு கொடுக்க மாட்டாங்க

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தாயார் காலமானார்.! திரையுலகினர் இரங்கல்.! 3

விளம்பரம்

இந்த நிலையில் இன்று காலை உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து அவர் ஹைதராபாத்தில் காலமானார். அவரது உடல் பத்மாலயா ஸ்டுடியோவில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், அவரது இறுதி ஊர்வலம் நாளை மறுநாள் மகா பிரஸ்தானத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகேஷ்பாபுவின் தாயார் மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment