பொன்னியின் செல்வன் படத்தில் தான் ஐஸ்வர்யா ராயுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் பொழுது கூச்சமாக இருந்ததாக நடிகர் சரத்குமார் தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். நாளை மறுநாள் தமிழகமெங்கும் உள்ள 750 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது பொன்னியின் செல்வன். இந்த படத்தை மணிரத்னம் மிக பிரம்மாண்டமாக இயக்கியிருக்கிறார். இதில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்திக், ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார் பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஜெயராம் என அனைத்து முன்னணி நடிகர்களையும் களம் இறக்கி நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் மணிரத்தினம். படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே அனைத்து தியேட்டர்களும் நிரம்பிவிட்டது. படம் வெளியாவதற்கு முன்பாகவே கோடிக்கணக்கில் ஓவர்சீஸில் ப்ரீ புக்கிங்கில் வசூலையும் குவித்து இருக்கிறது பொன்னியின் செல்வன்.

இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. தற்போது இதில் பெரிய பழுவேட்டரையராக நடித்திருக்கும் சரத்குமார் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் அவர் பல கருத்துக்களை கூறியிருந்தார். முதலில் கலைஞர் கருணாநிதி தான் பொன்னியின் செல்வனை படிக்குமாறு தனக்கு அறிவுறுத்தியதாகவும், அப்போது அதை படித்து விட்டேன். தற்போது மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிப்பதற்காக அந்த கதையை ஒரு முறை படிக்க சொன்னார். அதனால் மீண்டும் படித்தேன். மேலும் உடலையும் அவர் இன்னும் கொஞ்சம் ஏற்றுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். எனவே அதற்கு ஏற்றார் போல் நான் உடலையும் ஏற்று விட்டேன் என்று பேசினார்.

பிறகு ஐஸ்வர்யா ராய் உடன் நடித்தது குறித்து செய்தியாளர் கேட்டபோது, தனக்கு ஐஸ்வர்யா ராய் உடன் நடிக்கும் பொழுது மிகவும் கூச்சமாக இருந்தது. அப்பொழுது மணிரத்தினம் ஏன் உங்களுக்கு ரொமான்ஸ் வரவில்லையா என்று கேட்டார். அதெல்லாம் இல்லை என்று நடித்துக் கொடுத்தேன். மேலும் தனது மனைவி ராதிகாவிடம் ஐஸ்வர்யாவுடன் நடிக்கும் காட்சிகளின் போது நான் ஐஸ்வர்யாவுடன் நடிக்க இருப்பதாக கூறுவேன், அவரும் கொஞ்சம் பொறாமையில் ம்ம்..நீங்கள் எல்லாம் பெரிய ஆள், உலக அளவியுடன் நடிக்கிறீர்கள் என்று கலாய்ப்பார். மேலும் ஐஸ்வர்யா ராய் மிகவும் பண்பானவர் ஒருமுறை தன் மகள்கள் அவரை சந்திக்க வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தேன். ஆனால் எதற்கு கடிதம் எல்லாம்? என்று சொல்லி உடனடியாக எனது மகள்களை அவர் சந்தித்தார் என்றும் கூறினார்.

மேலும் பெரிய பலவேட்டரையராக உடை அணிந்து கொண்டு கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு தான் அமர்ந்திருந்த போது என்னை ஐஸ்வர்யா ராய் வளைத்து வளைத்து போட்டோ எடுத்தார். அதில் ஒரு போட்டோ மிக அருமையாக வந்திருந்தது. அதை நான் படம் வெளியான பிறகு தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்வேன் என்று கூறினார். இந்த உடையில் கூலிங் கிளாஸ் அணிந்து இருப்பதே வித்தியாசமாக இருப்பதாக சொல்லி ஐஸ்வர்யாராய் தன்னை அவ்வாறு படம் எடுத்ததாக சரத்குமார் கூறினார். மேலும் தனக்கும் சின்ன பழுவேட்டரையராக நடித்துள்ள பார்த்திபனுக்கும் இடையேயான அந்த காட்சிகள் எல்லாம் அருமையாக வந்திருக்கிறது. இந்த படம் வெளியான பிறகு சோழர்களின் பெருமையை உலகம் அறியும் என்றும் குமார் பேசினார்.
