2018ம் ஆண்டு கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பான திருமணம் என்னும் சீரியலின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர்கள்தான் சித்து மற்றும் ஸ்ரேயா. சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்துவும், ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயாவும் நடித்து வந்தனர். இவர்கள் இருவரின் காம்பினேஷனும் மக்களுக்கு மிகவும் பிடித்து போய் இருந்ததால், இவர்களை திருமணம் செய்து கொள்ளுமாறு ரசிகர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். அதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இரு வீட்டாரின் சம்மதித்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரேயா மங்களூருவைச் சேர்ந்தவர். நடிக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்து நடித்து வருகிறார்.

சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2வில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஸ்ரேயா ஜீ தமிழில் ரஜினி என்ற சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சித்து விரைவில் வெள்ளித்திரையில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இருவரும் இணைந்து youtube சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். அதில் அவர்கள் தங்களது வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர். இந்த வீடியோக்களை பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசிப்பது உண்டு. தற்போது இருவரும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அங்கு சித்துவுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்காக மிகப்பெரிய சர்பிரைஸ் ஒன்றை செய்துள்ளார். அந்த வீடியோவை சித்துவே இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.