தெலுங்கன் வாழணும்? தமிழன் சாகணுமா? சுஹாசினியை கிழித்து தொங்கவிட்ட கே ராஜன்

பொன்னியின் செல்வன் ஒரு தெலுங்கு படம் என்று இயக்குனர் மணிரத்தினம் மனைவி சுஹாஷினி பேசியதற்கு தயாரிப்பாளருக்கு ராஜன் கடும் கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார். கடந்த சில நாட்களாகவே பொன்னியின் செல்வன் மற்றும் பாகுபலி ரசிகர்களுக்கு இடையே ட்விட்டரில் சண்டை நீடித்து வருகிறது. மேலும் படத்தை பிரமோஷன் செய்ய ஆந்திராவிற்கு சென்றபோது நடிகை சுஹாசினி மேடையில் ஏறி இந்த படத்தை தமிழ்நாட்டில் நாங்கள் சில நாட்கள் மட்டுமே எடுத்தோம். அதுவும் பாண்டிச்சேரி, பொள்ளாச்சி போன்ற இடங்களில் தான் எடுத்தோம். மீதி அனைத்துமே ஆந்திராவில் தான் எடுத்தோம். எனவே இது உங்கள் படம். இது தெலுங்கு படம். இதை நீங்கள் தான் எப்படியாவது வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பேசி இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதைப் பார்த்த தமிழ் ரசிகர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். தெலுங்கு படம் என்றால் அங்கே மட்டும் ரிலீஸ் பண்ண வேண்டியதுதானே? எதுக்காக தமிழ் நாட்டிற்கு வருகிறீர்கள் என்றெல்லாம் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் மீம்ஸ்களைப் போட்டு கலாய்த்திருந்தனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் கே ராஜன் சுஹாசினி பற்றி சில கருத்துக்களை கூறியிருக்கிறார். இங்கு தமிழ் சினிமா துறையில் ஆயிரம் தோழர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் போது, நீங்கள் ஆந்திராவுக்கு சென்று படம் எடுத்து விட்டு தமிழ் தொழிலாளர்களை எல்லாம் வேலை இல்லாமல் ஆக்கிவீட்டீர்கள், தெலுங்கன் வாழ வேண்டும், தமிழன் சாக வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்புடையவை  கோடிகளை அள்ளி குவித்த GOAT..! முதல்நாளே வசூலில் முரட்டு சம்பவம்..! வெளியான வெறித்தனமான அப்டேட்..!

தெலுங்கன் வாழணும்? தமிழன் சாகணுமா? சுஹாசினியை கிழித்து தொங்கவிட்ட கே ராஜன் 1

விளம்பரம்

மேலும் ஆந்திராவில் படம் எடுத்ததால் வரியும் ஆந்திர அரசுக்கு போய்விட்டது என்று பேசினார். கே.ராஜனின் முழுப் பேட்டியை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Jeeva Today

விளம்பரம்

Leave a Comment