இயக்குனர் வெற்றிமாறனுக்கு எதிராக பேரரசு பேசியிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. சென்னையில் நடந்த குறும்பட விழாவில் கலந்து கொண்ட வெற்றிமாறன், பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். சினிமாவை திராவிட இயக்கங்கள் கையில் எடுத்த பின்பு தான் கலை மக்களுக்கானது என்று பேசினார்கள், மக்களை பிரதிபலிப்பது தான் கலை என்று உணர்த்தினார்கள், அந்த கலையை நாம் சரியாக கையாள வேண்டும். ஏற்கனவே நம்மிடமிருந்து பல அடையாளங்களை திருடி கொண்டார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக காட்டுவதும் தொடர்ந்து நடப்பதாக வெற்றிமாறன் குற்றம் சாட்டியிருந்தார். வெற்றிமாறனின் இந்த கருத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் பேரரசு வெற்றிமாறனுக்கு எதிராக பல கருத்துக்களை கூறியிருக்கிறார். எந்த மேடைக்கு சென்றாலும் இந்து மக்களை இழிவுபடுத்துவதையே சிலர் தொழிலாக வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் பதில் சொன்னால் உடனே எங்களை மத வெறியர்கள் என்று சொல்கிறார்கள் என்று கூறினார். மேலும் இயக்குனர் வெற்றிமாறன் பேசும்பொழுது ராஜராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுப்பதாக பேசி இருக்கிறார். ராஜராஜ சோழன் இந்து இல்லை என்று சொன்னால் அவர் கிறிஸ்துவரா இல்லை இஸ்லாமியரா? ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாகாணங்களாக இருந்ததை இணைத்து இந்தியா என்ற ஒரு நாடாக்கியுள்ளனர்.

சாமி கும்பிடாதவர்களுக்கு என்ன பிரச்சனை? உங்களுக்கு சாமி கும்பிட பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருந்து விடுங்கள். நாத்திகம் பேசுபவர்கள் மனிதர்களே இல்லை, அவர்கள் மனநோயாளிகள். போலி சாமியார்களை விட போலி நாத்திகர்கள் மிக மோசமானவர்கள். அவர்களால் தான் இந்த நாட்டுக்கு கேடு. சேர நாடு, சோழநாடு என்றெல்லாம் இருந்ததை இணைத்து தமிழகம் என்று அறிவித்தார்கள். அதேபோலத்தான் மதங்களை இணைத்து இந்து மதம் என்று அறிவித்தார்கள். நாத்திகம் பேசுபவர்கள் மனிதர்களே இல்லை, மதத்தை இழிவுபடுத்தவர்கள் மனிதர்களே இல்லை அவர்கள் மனநோயாளிகள் என்று கடமையாக விமர்சித்தார். அவரின் முழு பேட்டியை நீங்களும் காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: i Tamil News