விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் தொடரில் தற்போது அடுத்த விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வருகிறது. ஸ்ருதி தான் கர்ப்பமாக இருப்பதாக வீட்டில் உள்ள அனைவரையும் நம்ப வைத்து இருக்கிறார். இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் கார்த்திக்கும் கார்த்திக் அம்மாவும் ஸ்ருதியை பார்க்க நேற்று வந்திருந்தனர். அப்போது காதம்பரி, அவரது தாயார் ருக்மணி, மற்றும் காதம்பரியின் தந்தை விஸ்வநாதன் ஆகியோரும் ஸ்ருதியை பார்க்க வந்திருந்தனர். அப்போது அனைவரும் அங்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தொடர்ந்து இன்று என்ன நடந்தது, ஸ்ருதியின் சதி என்ன என்பது குறித்த இன்றைய எபிசோடின் முழு விவரத்தை பார்க்கலாம்.

நேற்று ஆடல் பாடல் எல்லாம் முடிந்து விட்டு ஸ்ருதி மற்றும் அவரது தாய் காதம்பரி ருக்மணி, விஸ்வநாதன் என அனைவரும் மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஸ்ருதி தான் உண்மையிலேயே கர்ப்பமாக இல்லை என்ற விஷயத்தை கூறுகிறார். இதனால் கோபமான காதம்பரி ஸ்ருதியின் கன்னத்தில் ஓங்கி அறைகிறார். அறைந்த வேகத்தில் ஸ்ருதி தடுமாறி கீழே விழுகிறார். பின்னர் எந்தெந்த விஷயத்தில் விளையாட வேண்டும் என்று தெரியாமல், இப்படி இந்த விஷயத்தில் போய் விளையாண்டு வைத்திருக்கிறாயே என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். மேலும் ருக்மணி ஸ்ருதியிடம், கரு கலைந்து விட்டதாக உனது மாமனார் மனோகரிடம் போய் சொல்லிவிடு, அவர் உன்னை மன்னித்து விடுவார் என்று கூறுகிறார். ஆனால் ஸ்ருதியோ இந்த விஷயம் தெரிந்தால் அவர் என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுவார் என்று பதில் அளிக்கிறார்.

இதனால் நால்வரும் சேர்ந்து ஒரு விஷயத்தை திட்டமிடுகின்றனர். படியிலிருந்து கீழே தவறி விழுந்து கரு கலைந்து விடுவது போல் நாடகம் ஆட நால்வரும் திட்டமிடுகிறார்கள். ஆனால் தானாக விழுந்தால் யாரும் நம்ப மாட்டார்கள், சக்தி தள்ளிவிட்டது போல செய்து விட்டால் அனைவரும் நம்பி விடுவார்கள் என்று ருக்மணி ஐடியா கொடுக்கிறார். இதற்காக ருக்மணியும் ஸ்ருதியும் பலமுறை ஒத்திகை பார்க்கிறார்கள். பின்னர் அங்கு வரும் சக்தியிடம் தனக்கு தலை சுற்றுவது போல் இருக்கிறது. ஒரு ஜூஸ் கிடைக்குமா என்று ஸ்ருதி கேட்கிறார். அப்பொழுது பேசிக் கொண்டிருந்தபோதே ஸ்ருதி மயங்கி படிக்கட்டில் பின்னால் உருண்டு விழுவது போல நாடகமாடுகிறார். தன் வயிற்றில் அடிபட்டது போல கதறி அழுகிறார். பின்னர் அங்கு வரும் ருக்மணி மற்றும் காதம்பரி சக்தி தான் மாடியில் இருந்து ஸ்ருதியை தள்ளி விட்டதாகவும், கருவை கலைக்க வேண்டும் என்பதால் தான் இவ்வாறு செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக்தி தான் அவ்வாறு செய்யவில்லை என்று கதறி அழுகிறார். இதை மனோகரும், வருணும் நம்புகின்றனர். பின்னர் மருத்துவமனைக்கு செல்லும் ஸ்ருதி அங்கு தருணின் கையைப் பிடித்து வலி தாங்கவில்லை என கதறிக் கொண்டிருக்கிறார். பின்னர் மருத்துவர் வந்து ஸ்ருதியை சோதனை செய்கிறார். அப்போது மருத்துவரிடம் ருக்மணி ஸ்ருதிக்கு கரு கலைந்து விட்டது போல ஒரு போலி சான்றிதழை வழங்குமாறு கேட்கிறார். ஆனால் என் தொழிலுக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. நான் அவ்வாறு செய்ய மாட்டேன் என்று சொல்லி மருத்துவர் அங்கிருந்து இவர்களை அப்புறப்படுத்துமாறு உத்தரவிடுகிறார். அங்கே வரும் நர்சும் இவர்களை கிளம்புமாறு கட்டளை இடுகிறார். ஆனால் ஸ்ருதி என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். தனது தாயார் ருக்மணியிடம், உன் பேச்சைக் கேட்டால் இனிமேல் எல்லாம் வீண் உன் பேச்சை இனிமேல் கேட்க போவதில்லை என்று சத்தம் போடுகிறார் காதம்பரி.

உடனே ருக்மணி மீண்டும் ஒரு ஐடியா செய்கிறார். மருத்துவர் சான்றிதழ் கொடுக்கவில்லை என்றால் என்ன? நாம் மருத்துவமனையில் தானே இருக்கிறோம் நாம் என்ன சொன்னாலும் அதை நம்பி விடுவார்கள் என்று தருணிடம் சென்று அழுது கொண்டே கரு கலைந்து விட்டதாக கூறுகிறார். இதனால் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார் தருண். இத்துடன் இந்த இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. மேலும் உண்மை என்ன என்பதை, சக்தியும் தருணும் எப்படி கண்டுபிடிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.