முதலில் மஹாலக்ஷ்மி, தற்போது திவ்யா ஸ்ரீதர், நடிகைகள் வாழ்க்கையில் விளையாடும் ஈஸ்வர்

சின்னத்திரை நடிகைகளின் திருமண வாழ்க்கையில் புகுந்து விளையாடும் ஒரு நபராக ஈஸ்வர் என்கிற நடிகர் இருக்கிறார். ஏற்கனவே சின்னத்திரை நடிகையும் தற்போது தயாரிப்பாளர் ரவீந்தரை மணந்துள்ள மகாலட்சுமி உடன் காதல் உறவில் இருந்த ஈஸ்வரின் பெயர் தற்போது மகராசி சீரியலில் நடித்து வரும் திவ்யாவுடன் இணைத்து பேசப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சின்னத்திரை சீரியல் நடிகரான ஈஸ்வர் ஜீ தமிழில் தேவதையை கண்டேன் என்கிற தொடரில் நடித்து வந்தார். அப்போது அந்த தொடரில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை மகாலட்சுமிக்கும் இவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ காவல் துறையில் புகார் அளித்திருந்தார். அவர்களுடன் ஏற்பட்ட காதலுக்காக தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் விவாகரத்து கேட்டு கொடுக்காததால், கொடுமைப் படுத்துவதாகவும் ஜெயஸ்ரீ புகார் அளித்திருந்தார்.

முதலில் மஹாலக்ஷ்மி, தற்போது திவ்யா ஸ்ரீதர், நடிகைகள் வாழ்க்கையில் விளையாடும் ஈஸ்வர் 1 முதலில் மஹாலக்ஷ்மி, தற்போது திவ்யா ஸ்ரீதர், நடிகைகள் வாழ்க்கையில் விளையாடும் ஈஸ்வர் 3

விளம்பரம்

இதனால் ஈஸ்வரையும் அவரது தாயையும் சில நாட்கள் ஜெயிலில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர், தற்போது மீண்டும் ஒரு பிரச்சனையில் சிக்கி இருக்கிறார். ஈஸ்வரும் தானும் நல்ல நண்பர்கள் தான் எங்களுக்குள் எந்தவிதமான உறவும் இல்லை என்று மகாலட்சுமி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இந்த சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில், அவர் தற்போது தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டாவதாக திருமணமும் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் ஈஸ்வர் மற்றொரு சின்னத்திரை நடிகையான திவ்யா ஸ்ரீதரின் வாழ்க்கையில் விளையாடி இருப்பதாக தெரிகிறது. மகராசி சீரியலில் நடித்து வரும் திவ்யா ஸ்ரீதருக்கும் விஜய் டிவியின் செல்லமா சீரியலில் நடித்து வரும் அர்னவுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.

தொடர்புடையவை  முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி சீரியல்...! எண்டு கார்டு போட போகும் விஜய் டிவி..!

முதலில் மஹாலக்ஷ்மி, தற்போது திவ்யா ஸ்ரீதர், நடிகைகள் வாழ்க்கையில் விளையாடும் ஈஸ்வர் 5

விளம்பரம்

திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருக்கும் நிலையில், செல்லம்மா சீரியலில் தன்னுடன் நடிக்கும் சக நடிகையுடன் ஒரே வீட்டில், ஒரே அறையில் மிக நெருக்கமாக இருந்திருக்கிறார் அர்னவ். இதை தட்டி கேட்ட திவ்யாவின் வயிற்றிலேயே எட்டி உதைத்து அவர் கருவை கலைக்கவும் முயற்சி செய்து இருக்கிறார். இதனால் காவல் ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறார் திவ்யா. மேலும் இந்த பிரச்சனை குறித்து அர்னவ் சொல்லும் பொழுது ஈஸ்வர் என்கிற நபருடன் தனது மனைவியை மிக நெருக்கமாக இருப்பதாகவும், ஈஸ்வர் தான் இந்த கருவை கலைக்க முயற்சி செய்கிறார் என்றும், மேலும் தன்னிடம் ஈஸ்வர் பேசும்பொழுது உன் நன்னைக்காகத்தான் இவ்வாறு செய்கிறேன் என்று தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார். ஆனால் திவ்யாவுடன் இது பற்றி கேட்டபோது ஈஸ்வர் யார் என்று எனக்கு தெரியாது என பதிலளித்தார்.

முதலில் மஹாலக்ஷ்மி, தற்போது திவ்யா ஸ்ரீதர், நடிகைகள் வாழ்க்கையில் விளையாடும் ஈஸ்வர் 7

விளம்பரம்

அர்னவ் தான், இவர் தன்னுடைய நண்பர் என்று தனக்கு ஈஸ்வரரை அறிமுகப்படுத்தி வைத்தார். அதற்கு முன்பு அவர் யார் என்றே தமக்குத் தெரியாது என்று திவ்யா ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். ஈஸ்வருடன் இணைந்து குழந்தையை கலைப்பதற்கு திவ்யா திட்டம் போடுகிறார் என்று அர்னவ் பகிரங்கமாக குற்றம் சாட்டிய நிலையில் ஈஸ்வர் யார் என்றே தெரியாது என்று திவ்யா கூறிவிட்டது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து சீரியல் நடிகைகளின் வாழ்க்கையில் விளையாடும் ஒரு பிளேபாயாக ஈஸ்வர் இருக்கிறார் இனியாவது அவர் திருந்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

விளம்பரம்

Leave a Comment