உதவி செய்வது போல் நடித்து போண்டா மணியிடம் இருந்து 1 லட்சம் திருடிய நபர் கைது.!

உடல்நலமில்லாமல் இருக்கும் நகைச்சுவை நடிகர் போண்டாமணியிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை அவரது உதவியாளரே ஏமாற்றியுள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையில் இருந்து அகதியாக வந்தவர் போண்டாமணி. இவர் ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் நகைச்சுவை ஜாம்பவான்களாக இருந்த விவேக் மற்றும் வடிவேலுவுடன் இணைந்து படபலங்களில் நடித்தார். குறிப்பாக இவரின் “யார் கேட்டாலும் சொல்லிடாதீங்க” என்ற ஜோக் மிகப் பிரபலம். மேலும் இவர் அதிமுகவின் பிரச்சார குழுவிலும் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு இரு கிட்னிகளும் செயலிழந்து போனது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உதவி செய்வது போல் நடித்து போண்டா மணியிடம் இருந்து 1 லட்சம் திருடிய நபர் கைது.! 1

விளம்பரம்

ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது சாக்கடையில் விழுந்து நடிக்க சொன்னதாகவும், அதனால் தன்னுடைய நுரையீரலில் சாக்கடை தண்ணீர் ஏறி, நுரையீரலும் பாதிக்கப்பட்டதாகவும் அவர் பேட்டியில் கூறியிருந்தார். இதற்கிடையே அவருக்கு பலரும் உதவி செய்திருந்தனர். மனோபாலா, விஜய் சேதுபதி, நடிகர் தனுஷ் போன்றவர்கள் உதவி செய்திருந்தார்கள். மேலும் சுகாதாரத்துறை அமைச்சரும் நேரில் சென்று அவருக்கு தேவையான உதவிகளை வழங்கினார். இதனால் விரைந்து குணமடைந்த அவர் தற்போது வீடு திரும்பி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு உதவியாளராக ராஜேஷ் பிருத்திவ் என்பவர் இருந்து வந்துள்ளார். நேற்று போண்டாமணியின் வீட்டிற்கு வந்த ராஜேஷ் பிருத்திவ்யிடம் அவரது மனைவி தனது ஏடிஎம் கார்டை கொடுத்து மருந்து மாத்திரைகள் வாங்கி தருமாறு கூறியிருக்கிறார். பெற்றுக் கொண்டு வெளியே சென்ற அவர் நகைக்கடைக்கு சென்று ஒரு லட்சம் ரூபாய்க்கு நகைகளை வாங்கியிருக்கிறார்.

தொடர்புடையவை  காஷ்மீரில் உள்ள சிவ லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்து மஹா சிவராத்திரி கொண்டாடிய திரிஷா.!

உதவி செய்வது போல் நடித்து போண்டா மணியிடம் இருந்து 1 லட்சம் திருடிய நபர் கைது.! 3

விளம்பரம்

மாத்திரை வாங்க நம்பி அனுப்பிய நபர் ஏடிஎம் கார்டிலிருந்து பணத்தை திருடயது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தகவல் அறிந்து போரூர் போலீசாருக்கு அவரது மனைவி தகவல் கொடுக்க, ராஜேஷ் பிருத்திவை கைது செய்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் மற்றவர்களின் உதவியில் சிறுக சிறுக சேர்த்த பணத்தை உதவி என்கிற பெயரில் ராஜேஷ் என்பவர் திருடி கொண்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த செய்தியை நீங்களும் காண… Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: News18 Tamilnadu

விளம்பரம்

Leave a Comment