பொதுவாகவே வட இந்தியாவில் நடக்கும் பல சம்பவங்கள் நமக்கு சிரிப்பை வரவழைக்கும். குறிப்பாக பொது இடங்களில் இரு குடும்பத்தினர் சண்டை போட்டுக் கொள்வது, இரு பெண்கள் அடித்துக் கொள்வது, மற்றும் கல்யாண வீடுகளில் நடக்கும் காமெடிகள் போன்றவை வட இந்தியாவில் மிகப் பிரபலமாக இருக்கும். அது போன்ற ஒரு வீடியோ தான் தற்போது வெளியாகி இருக்கிறது. இது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்று விடுவது வழக்கமாக இருக்கிறது. அது போன்ற ஒரு வீடியோ தான் தற்போது வெளியாகியிருக்கிறது. மும்பை புறநகர் ரயிலில் ஏறிய பெண்கள் இருக்கை பிரச்சினை காரணமாக சரமாரியாக அடித்துக் கொள்ளும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது. தடுக்க வந்த பெண் போலீசாரின் மண்டையும் அவர்கள் உடைத்துள்ளனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பொதுவாகவே மும்பை ரயில் நிலையங்களில் அபரிமிதமான கூட்டம் நிரம்பி வழிவது சகஜம் தான். உலகிலேயே அதிக பயணிகள் பயணிக்கும் இடமாக மும்பை ரயில் நிலையம் இருக்கிறது. இந்த நிலையில் மராட்டிய மாநிலம் தானே பண்பில் இடையிலான உள்ளூர் பயணிகள் ரயிலில் தான் கடந்த புதன்கிழமை இரவில் இந்த மோதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. 50 வயதான பெண்மணி ஒருவர் தமது மகள் மற்றும் பேத்தியுடன் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அதே ரயில் பயணித்த மற்றொரு பெண் சினேகா என்பவரிடம் இருக்கை பிடிப்பது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. சினேகாவுடன் அந்த 50 வயது தாய் மற்றும் அவரின் மகள் குடுமியை பிடித்து சண்டையிட்டதால் சகப் பெண் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.

மோதல் குறித்த தகவல் அறிந்ததும் அடுத்த நிறுத்தத்தில் ரயில்வே பெண் காவலர் ஒருவர் ரயிலில் ஏறி விசாரணை நடத்தினார். அப்போது மீண்டும் மோதல் வெடித்ததில் பெண் காவலர் உட்பட இரண்டு பெண்களுக்கு மண்டை உடைந்தது. இதனால் ரயில் போர்க்களம் போல் காட்சி அளித்தது. காயமடைந்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் தொடர்பாக தாய் மற்றும் மகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயணிகள் ரயிலில் இருக்கைக்காக பெண்கள் மோதிக்கொண்ட காட்சிகள் வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..
Youtube Video Code Embed Credits: Sun News Tamil