இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதத்தை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்!!

இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதத்தை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்!! 1

அமெரிக்க பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சரகம் வெளியிட்டு இருந்த அறிக்கையின் அடிப்படையில் அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிற்கு 13 எம்.கே.45 ரக கடற்படை துப்பாக்கிகள் மற்றும் ராணுவ உபகரணங்களை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயுதங்கள், உதிரி பாகங்கள், அவற்றை கையாள்வதற்கான பயிற்சி, தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவை இதில் அடக்கம்.

விளம்பரம்

இந்த ராணுவ வியாபாரம் மூலம் தங்கள் நாட்டின் வெளியுறவு கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என்று அமெரிக்க அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. மேலும் இந்தியா நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் தனது எதிரிகளை திறன்பட எதிர்கொள்ள இந்த ஆயுதங்கள் உதவியாக இருக்கும் என்று அமெரிக்கா பெருமிதம் தெரிவி்த்துள்ளது.

விளம்பரம்

Leave a Comment