21 வயதில் நீதிபதி ஆனா இளைஞர்!இளைஞர்களுக்கு கிடைத்த பெருமை!!

21 வயதில் நீதிபதி ஆனா இளைஞர்!இளைஞர்களுக்கு கிடைத்த பெருமை!! 1

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் நகரைச் சேர்ந்தவர், மாயாங்க் பிரதாப் சிங், 21. ராஜஸ்தான் பல்கலையில், ஐந்தாண்டு எல்.எல்.பி., படிப்பை பயின்ற இவர், ராஜஸ்தான் நீதித்துறை சேவைகள் தொடர்பான தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் . இதையடுத்து, விரைவில் அவர் நீதிபதியாக பதவியேற்க இருக்கிறார். இதன் மூலம், நாட்டின் மிக இளம் வயது நீதிபதி என்ற பெருமை, அவருக்கு கிடைக்கவுள்ளது.

இது பற்றி , மாயாங்க் பிரதாப் சிங் கூறுகையில்: தினமும், 13 மணி நேரம் தொடர்ந்து படிப்பேன். என் பெற்றோரும், எனக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீதிபதியாக பணியாற்றுவோருக்கு நேர்மை தான் மிகவும் முக்கியம். வெளியில் இருந்து வரும் எந்த நெருக்கடிக்கும் ஆளாகாமல், ஆள் பலம் மற்றும் பண பலத்துக்கு ஆசைப்படாமல், நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். இவ்வாறு, அவர் கூறினார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment