திவ்யா கொடுத்த வழக்கில் நடிகர் அர்னவ் அதிரடி கைது.! 3 நாட்கள் தலைமறைவான நிலையில் கைது

சின்னத்திரை நடிகர் அர்னவ் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மாங்காடு பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அவரை நேரில் சென்று போலீசார் கைது செய்துள்ளனர். இன்று மாலை சென்னைக்கு அழைத்து வரப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்க இருக்கின்றனர். புதுக்கோட்டையை சேர்ந்தவர் நைனா முகமது என்கிற அர்னவ். இவர் சன் டிவியின் சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது விஜய் டிவியில் செல்லம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். 2017 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற தொடரில் நடித்து வந்த போது அந்த தொடரில் நடித்த திவ்யாவுக்கும் இவருக்கும் காதல் மறந்தது. திவ்யா பெங்களூருவைச் சேர்ந்தவர். ஐந்து ஆண்டுகளாக லிவ்விங் டு கெதரில் வாழ்ந்து வந்த அவர்கள், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த அடுத்த மாதமே தான் கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார் திவ்யா ஸ்ரீதர்.

திவ்யா கொடுத்த வழக்கில் நடிகர் அர்னவ் அதிரடி கைது.! 3 நாட்கள் தலைமறைவான நிலையில் கைது 1

விளம்பரம்

ஆனால் இது எதுவுமே அர்னவுக்கு பிடிக்கவில்லை. இன்ஸ்டாகிராமில் இருக்கும் திருமண புகைப்படங்கள் விளம்பரத்திற்கு எடுக்கப்பட்டது, தனக்கு திருமணமாகவில்லை என்று கூறுமாறு திவ்யாவை வற்புறுத்தி இருக்கிறார் அர்னவ். ஆனால் திவ்யா தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்ததால் தனது சுயரூபத்தை காட்டியிருக்கிறார் அர்னவ். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா என்கிற சீரியலில் நடித்து வரும் நடிகை உடனும் ஒரே வீட்டில் மிக நெருக்கமாக இருந்துள்ளார். இதையெல்லாம் திவ்யா கண்டிக்கவே இருவருக்கும் சண்டை முற்றியது. ஒரு நாள் சண்டை முற்றிய நிலையில் கர்ப்பமாக இருக்கும் திவ்யா வயிற்றில் அர்னவ் எட்டி உதைத்திருக்கிறார். இதனால் வலியால் துடித்த திவ்யா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்புடையவை  Modhalum Kaadhalum | தமிழ் - தெலுங்கு முறைப்படி நடக்கும் விக்ரம் வேதா திருமணம்.! பந்தக்கால் நடும் நிகழ்ச்சி.!

திவ்யா கொடுத்த வழக்கில் நடிகர் அர்னவ் அதிரடி கைது.! 3 நாட்கள் தலைமறைவான நிலையில் கைது 3

விளம்பரம்

தொடர்ந்து சிகிச்சை முடிந்து வந்த அவர் அர்னவின் உண்மையான முகத்தை ஊருக்கு காட்டினார். அவர் தொடரில் நடித்த மற்ற நடிகைகளை நெருக்கமாக இருப்பதற்காக, தனியாக வீட்டிற்கு அழைத்த ஆடியோக்களையும், குழந்தையை கலைப்பதற்காகவும், திருமணத்தை மறைப்பதற்காகவும் பேரம் பேசிய ஆடியோ போன்ற பல ரகசியங்களை திவ்யா வெளியிட்டார். மேலும் போரூர் காவல் நிலையத்திலும் அர்னவ் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனு செய்தார். மகளிர் காவல் நிலையம் சம்மன் அனுப்பியும், பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் எதற்கும் பதில் அளிக்காமல் சூட்டிங்கில் நடித்து வந்தார் அர்னவ். இந்த நிலையில் இன்று காலை மாங்காட்டில் தனிப்படை போலீசார் அவரை சூட்டிங் இடத்திற்கே சென்று கைது செய்துள்ளனர். விரைவில் அவர் போரூர் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திவ்யா கொடுத்த வழக்கில் நடிகர் அர்னவ் அதிரடி கைது.! 3 நாட்கள் தலைமறைவான நிலையில் கைது 5

விளம்பரம்

கட்டாய மதமாற்றச் சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அர்னவை கைது செய்துள்ளது காவல்துறை. அந்த செய்தியை நீங்களும் காண.. Watch the below video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Polimer News.

விளம்பரம்

Leave a Comment