மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வாழ்க்கையை தொடங்கியவர் சித்ரா . பின்னர் இவருக்கு விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குடும்ப பாங்கான இந்த அண்ணன் தம்பி கதையில் மூன்றாவது மருமகளாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பல பேரின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருந்தார் சித்ரா. கதிர் – முல்லை கதாபாத்திரத்தை ரசிக்கவே அந்த நாடகத்தை பல பேர் பார்த்தனர். அந்த அளவிற்கு ரசிகர்களை கொண்ட சித்ரா திடீரென ஒருநாள் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார் என்று செய்திகள் பரவியது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இதனால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சித்ரா கோழை இல்லை, தனி ஒரு பெண்ணாக இருந்து உழைத்து சம்பாதித்து வீடு, கார் என வாங்கியவர் சித்ரா, அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை என்றும், சித்ராவை அவரது வருங்கால கணவர் அடித்தே கொன்றுவிட்டார் என்று சித்ராவின் பெற்றோர்கள் கூறிவந்தனர். சித்ராவுக்கு ஹேம்நாத் என்பவருடன் திருமணம் நிச்சயம் ஆகி இருந்தது. சித்ரா ஷூட்டிங் முடிந்து ஒரு நாள் ஹேம்ந்த்துடன் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். அன்று இரவுதான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியது.

இந்த நிலையில் சித்ரா வழக்கில் கைதான ஹேம்ந்த் ஜாமினில் வெளியே வந்துள்ளார். அவர் தற்போது பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்ஷனுக்கும் வி.ஜே சித்ரா கொலை வழக்கிற்கும் சம்பந்தம் இருப்பதாக அவர் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். சித்ராவை ரக்ஷன் பல நாட்களாக தொந்தரவு செய்து வந்ததாகவும், ரக்ஷன் பற்றிய அனைத்து தகவல்களும், ஆதாரங்களும் சித்ராவின் ஆண் நண்பர் ரோகித் என்பவரிடன் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அவரின் முழுப் பேட்டியை நீங்களும் காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: News Tamil 24×7