மௌனராகம் சீரியல் வருண் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சல்மானும் அவரது தம்பியின் மனைவியாக ஸ்ருதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷில்பாவும் இணைந்து ரஞ்சிதமே பாட்டிற்கு நடனமாடி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விஜய் டிவியில் பல கோடி ரசிகர்களைக் கொண்ட ஒரு தொடர் என்றால் அது மௌன ராகம் தான். இந்த தொடருக்கு இத்தனை ரசிகர்கள் இருக்க காரணம் சில சீரியல்கள் போல் ஒரே ட்விஸ்ட்டை ஐந்து ஆண்டுகளாக ஓட்டிக்கொண்டு இல்லாமல், ஏதேனும் ஒரு ட்விஸ்ட் நடந்தால் அதை உடனடியாக உடைத்து விட்டு அடுத்த கட்டத்தை நோக்கி கதை நகர்ந்து விடும். அதனாலேயே இந்த தொடருக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது இந்த தொடரில் பல விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வருகிறது. இத்தனை வருடங்களாக காணாமல் போயிருந்த வருணின் தாயார் மீண்டும் வீட்டிற்கே திரும்பி வந்து விட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் வருணுக்கு நடந்த அனைத்தும் மறந்து போய் விடுகிறது. தனது தாயை அவருக்கு நினைவு வரவில்லை இவ்வளவு நாள் அம்மாவை நினைத்து மனநோயிலிருக்கும் வருணுக்கு அம்மா அருகில் இருக்கும் போது கூட அவருக்கு நினைவு திரும்பவில்லை. இதனால் கதை கொஞ்சம் சுணக்கமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரின் ரசிகர்கள் வருண் இப்படி இருப்பதைப் பார்க்க முடியவில்லை. மீண்டும் பழைய வருணை கொண்டு வாருங்கள். அவருக்கு அவரின் அம்மாவின் நினைவை மீண்டும் கொண்டு வரும்படி கதையை நகர்த்துங்கள் என்று இயக்குனருக்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் வருணின் தாயாரிம் சக்தி பற்றி போட்டுக் கொடுத்து சக்தி மீது வெறுப்பை உண்டு செய்து கொண்டிருக்கிறார் ஸ்ருதி. இதனால் கதையை மாற்றுமாறு ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த தொடரில் வருண் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சல்மான். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். ஸ்ருதி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஷில்பா.

இந்த தொடரில் நடிக்கும் சக்தி, வருண், தருண், ஸ்ருதி ஆகிய அனைவரும் இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவாக இருப்பவர்கள். அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். தற்போது வருண் மற்றும் ஸ்ருதி இருவரும் இணைந்து சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர். அந்த வீடியோவிற்கு லைக்கள் குவிந்து வருகிறது. மேலும் வருணிடம், அது உங்கள் தம்பி மனைவி அவருடன் சேர்ந்து நடனம் ஆடுகிறீர்களே? சக்தியுடன் சேர்ந்து ஆடுங்கள் என்று காமெடியாக கலாய்த்து கமெண்ட்களை போட்டு வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7