விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை என்ற நாடகத்தை யாரும் மறந்து இருக்க முடியாது. குறிப்பாக அந்த நாடகத்தின் டைட்டில் பாடலான “என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு” என்ற பாடல் பலரது ரிங் டோனாக இருந்தது. 90ஸ் கிட்ஸ்களுக்கு பேவரைட் ஆன இந்த நாடகத்தில் ஹீரோயினாக நடித்த சந்திரா லக்ஷ்மணுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. தற்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அறிவித்துள்ளார் சந்திரா.!

கேரளாவை சேர்ந்த சந்திரா முதன்முதலில் மலையாள நாடகங்களில் நடித்து வந்தார். தமிழில் முதல்முறையாக கோலங்கள் நாடகத்தில் நடித்தார். பின்னர் பிரஜினுடன் இணைந்து விஜய் டிவியில் காதிலிக்க நேரமில்லை தொடரில் நடித்தார். பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான சொந்த பந்தம், பாச மலர் போன்ற நாடகங்களில் நடித்தார். தில்லாலங்கடி போன்ற சில படங்களிலும் நடித்தார். பின்னர் மலையாள நாடகத்தில் அவர் நடித்து கொண்டிருந்த போது டோஷ் கிறிஷ்டியை திருமணம் செய்து கொண்டார்.

நவம்பர் 2021ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. பையனின் கையை பிடித்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சந்திரா, அது ஒரு பையன். எங்களுக்காகவும் எனக்காகவும், என்னுடைய சின்ன குழந்தைக்காகவும் பிராத்தனை செய்த எங்கள் பெற்றோர்களுக்கும் மற்றும் நலம் விரும்பிகளுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார் சந்திரா.!
