
அல்பேனியா நாட்டில் ஏற்பட்ட 6 புள்ளி 4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பல வீடுகள் கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்து உள்ளது. இதில் 4 பேர் உயிர் இழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
இதனிடையே அங்கு சாலை ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்ட கார் ஒன்று நிலநடுக்கத்தின் அதிர்வால் குறை மின்னழுத்தம் ஏற்பட்டு தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அந்த நாட்டு அரசு மக்கள் அனைவரையும் பாதுகாப்பு இடத்தில் அப்புறப்படுத்தப்பட்டனர்.
விளம்பரம்
விளம்பரம்