தெலுங்கானா மாநிலத்தில் துயர சம்பவம்! பெண் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுப்பு!!

தெலுங்கானா மாநிலத்தில் துயர சம்பவம்! பெண் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுப்பு!! 1

தெலுங்கானா மாநிலத்தில் இளம் மருத்துவர் எரித்து கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அதே பகுதியில் சித்லகுண்டா எனும் இடத்தில் மற்றொரு இளம் பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அடுத்தடுத்த அதிர்ச்சிகளால் தெலுங்கானா மக்கள் உறைந்து போய் விட்டனர். என்ன நடக்கிறது தெலுங்கானாவில் என நாடே கேள்வி எழுப்பும் நிலையில் அங்கு நடக்கும் சம்பவங்கள் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தில் இருந்து தெலுங்கானா மக்கள் மீள்வதற்குள் பிரியங்கா உடல் கண்டெடுக்கப்பட்ட சில கிலோ மீட்டர் தொலைவில் மற்றொரு பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருப்பது அடுத்த அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது. இரவு 9 மணியளவில் அவ்வழியே சென்ற ஐயப்ப பக்தர்கள் புதரில் சடலம் எரிந்து கொண்டிருப்பதை கண்டுள்ளனர். இதனை அடுத்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  வழிபாட்டு தளங்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றடையும் வரை பெண்ணின் உடல் எரிந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. 80 சதவீத தீ காயங்களுடன் பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது. உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். நிகழ்விடத்தை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருவதாக காவல் இணை ஆணையர் பிரகாஷ் ரெட்டி தெரிவித்து இருக்கிறார். பகல் நேரங்களில் பக்தர்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் நிலையில் மாலையில் சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்ணுக்கு 35 வயது இருக்கலாம் என தெரியவந்துள்ளது. முகம் சிதைந்த நிலையில் இருப்பதால் அடையாளம் காண்பதில் சிக்கல் இருப்பதாக கூறியுள்ள காவல்துறையினர், தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். மருத்துவர் பிரியங்காவின் உடல் கண்டெடுக்கப்பட்ட 36 மணி நேரத்துக்குள் மற்றொரு பெண்னின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருப்பது தெலுங்கானாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment