சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது!!

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது!! 1

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமாக பெய்ய தொடங்கியுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், கிண்டி, வேளேச்சேரி, வடபழனி, கோயம்பேடு, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

விளம்பரம்

இதனிடையே சென்னையில் பல்வேறு இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோர மட்டங்களில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

Leave a Comment