ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்டமாக 13 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்டமாக 13 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது!! 1

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு இன்று முதல் டிசம்பர் 20 ஆம் வரை 5 கட்டமாக வாக்குப் பதிவுகள் நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் டிசம்பர் 23-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

முதல் கட்டமாக இன்று 13 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு துவங்கியது முதலே, மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.

விளம்பரம்

சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேஹர், பாங்கி, தால்டோகஞ்ச், பிஷ்ராம்பூர், சாதாரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் முதலிய தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

ஜார்க்கண்டில் ஆளும் பாரதீய ஜனதா முதல் முறையாக கூட்டணி அமைக்காமல் போட்டியிடுகிறது. பாஜகவுக்கு எதிராக ஜே.எம்.எம் கூட்டணி போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment