பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள ரட்சிதா மகாலட்சுமியின் கணவர் தற்போது தனது மனைவி பற்றி சில தகவல்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பெங்களூருவை சேர்ந்தவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் நடிகர் தினேஷை திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு குடி பெயர்ந்தார். முதன்முதலாக விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரில் கதாநாயகியாக நடித்தார். அதன் பின்னர் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த நாடகம் என்று சொன்னால் அது சரவணன் மீனாட்சி தான். பாகம் 2 மற்றும் 3ல் தொடர்ந்து மீனாட்சியாக நடித்து அசத்தியிருந்தார் ரட்சிதா. அவர் கடைசியாக நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோது தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று சீரியலை விட்டு விலகி இருந்தார்.

பின்னர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ஒரு தொடரில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்த தொடர் பாதியிலேயே கைவிடப்பட்டது. சமீப காலமாக ரட்சிதாவிற்கும் அவரது கணவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை. இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய தினேஷ், தனக்கு சரியான வேலை இல்லாத காரணத்தினால் சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டு இருப்பதாக கூறியிருந்தார். தொடர்ந்து ரட்சிதாவிற்கு பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ரட்சிதாவை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் போதிலும், அவர் வெற்றி பெற்று வெளியே வரவேண்டும் என்று தினேஷ் வாழ்த்தி இருந்தார். இந்த சீசனில் மற்றொரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கும் ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதாவை மூக்குத்தி என்றும் அவருடைய கிரஷ் என்றும் அழைத்து வருகிறார்.

மேலும் அடிக்கடி ரட்சிதாவிடம் சென்று சில சில்மிஷங்களிலும் ராபர்ட் மாஸ்டர் ஈடுபட்டு வருகிறார். இது இரண்டு நாட்களுக்கு முன்பு உச்சகட்டத்தை அடைந்தது. ரட்சிதா ராபர்ட் மாஸ்டரை அண்ணன் போல் பார்க்கிறேன் என்று கூறியதும், அண்ணன் தானே எனக்கு ஒரு முத்தம் கொடு என்று கேட்டு தொந்தரவு செய்தார். இது பல தரப்பினரையும் முகம் சுளிக்க வைத்தது. ரட்சிதா எவ்வளவோ முயன்றும் அவர் தொடர்ந்து அது போல் கேட்டுக் கொண்டே இருந்தார். இதனால் ராபர்ட் மாஸ்டரின் காதல் எல்லை மீறுகிறது என்று சிலர் இணையதளங்களிலும் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டரின் செயல் குறித்து ரட்சிதாவின் கணவர் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் அவர் காட்டமாக விமர்சனம் செய்திருக்கிறார்.

ஒரு பெண் சிரித்து பேசி எல்லாரையும் சந்தோசமாக வைத்துக் கொள்கிறார் என்றால், அவள் எல்லோருக்குமானவள் அல்ல, எல்லா மனிதர்களும் அமைதியான சுதந்திரத்துடன் வாழ்வதற்கு வசதியான சமூகத்தை உருவாக்க சில முட்டாள்களைப் போன்ற ஆண்கள் வளர வேண்டும் என்று தினேஷ் பதிவு செய்துள்ளார். என்னதான் வேலை இல்லை என்று கணவரை ஒதுக்கி வைத்திருந்தாலும் ரட்சிதாவின் கணவர் இன்னும் ரட்சிதா மீது காதல் வைத்திருப்பதாக இந்த பதிவில் இருந்து புரிந்து கொள்ள முடிவதாக அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Robert Master What is this
🤮🤮🤮🤮#BiggBossTamil6 #BiggBoss#BiggBossTamil pic.twitter.com/Frv1PbSxcn— BIGG BOX TROLL (@drkuttysiva) November 8, 2022