யசோதா திரைப்படம் எப்படி இருக்கு.! முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5)

நடிகை சமந்தா நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் யசோதா. இந்த படத்தை அறிமுக இயக்குனர்களாக ஹரிஷ் மற்றும் ஹரி ஆகியோர் இயக்கி இருக்கின்றனர். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகியிருக்கிறது. மேலும் படத்தை டப் செய்து கன்னடம், மலையாளம், ஹிந்தி என மற்ற மொழிகளிலும் படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இந்தப் படத்திற்கு மணி ஷர்மா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் கதைகளுக்கு தற்போது முன்னணி நடிகர்கள் முக்கியத்துவம் கொடுத்த வருகின்றனர். அந்த வகையில் வாடகை தாய் முறையில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் குறித்த முழுமையான விமர்சனங்களை தற்போது பார்க்கலாம்.

யசோதா திரைப்படம் எப்படி இருக்கு.! முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5) 1

விளம்பரம்

சமந்தாவிற்கு பணம் தேவை இருக்கிறது. ஏனென்றால் அவரது தங்கைக்கு ஒரு ஆபரேஷன்காக அவருக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. இதனால் வாடகை தாயாக மாற முடிவெடுக்கிறார் சமந்தா. இதற்காக அவர் வாடகைத்தாய்கள் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறார். அதனால் அங்கு சமந்தாவிற்கு பல அதிர்ச்சி தரும் விஷயங்கள் நடக்கிறது. ஒரு கட்டத்தில் சமந்தா வாடகை தாய்க்காக வரும் பெண்களை வைத்து அங்கு வேறு ஏதோ சதித்திட்டம் நடக்கிறது என்பதை அறிந்து கொள்கிறார். பின்னர் அவர்களிடமிருந்து எப்படி தப்பித்து சமந்தா வெளியேறுகிறார். அவர்களின் சதித்திட்டங்களை ஒவ்வொன்றாக எப்படி கண்டுபிடிக்கிறார்? இறுதியில் சமந்தாவிற்கு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதி கதை.

தொடர்புடையவை  கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை விஜி சந்திரசேகரின் மகளின் திருமணம்.! வந்து குவிந்த பிரபலங்கள்.!

யசோதா திரைப்படம் எப்படி இருக்கு.! முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5) 3

விளம்பரம்

இந்தப் படம் மக்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது. இந்தப் படத்திற்காக தனக்கு உடல்நலம் சரியில்லாத நிலையிலும் மிகக் கடுமையான உழைப்பை சமந்தா கொடுத்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. தனி ஒரு பெண்ணாக இருந்து மொத்த படத்தையும் அவர் தூக்கி நிறுத்தி இருக்கிறார். நிறைய கதாபாத்திரங்கள் இல்லாமல் அளவான கதாபாத்திரங்களை வைத்து இந்த படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றனர் புதுமுக இயக்குனர்களான ஹரி மற்றும் ஹரீஷ். இரண்டாம் பாகத்தில் வரும் ட்விஸ்ட், கதை நகரும் விதம், கேமரா ஒர்க், ஒளிப்பதிவு, திரைக்கதை என அனைத்திலும் யசோதா படம் வெற்றி பெற்று இருக்கிறது என்றே சொல்லலாம். படம் பார்த்துவிட்டு வந்த மக்கள் பலரும் சண்டை காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர்.

யசோதா திரைப்படம் எப்படி இருக்கு.! முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5) 5

விளம்பரம்

 

படத்தின் பாசிட்டிவ் விஷயங்கள்
  1. விறுவிறுப்பாக சென்ற இரண்டாம் பாகம்.
  2. சமந்தா, வரலட்சுமி, உன்னி முகுந்தன் ஆகியோரின் சிறந்த நடிப்பு.
  3. தனி ஒரு ஆளாக நின்று மொத்த படத்தையும் தூக்கி நிறுத்தி இருக்கும் சமந்தாவின் நேர்த்தியான நடிப்பு.
  4. ஹாலிவுட் படங்களுக்கு இணையாக வரும் சண்டை காட்சிகள்.
  5. சர்க்கார் படத்துக்கு பிறகு வில்லியாக மிரட்டி இருக்கும் வரலட்சுமி சரத்குமார்.கடைசி 10 நிமிட கிளைமாக்ஸ் காட்சிகள்.
தொடர்புடையவை  அய்யயோ....நாயகி இவரா வேண்டவே வேண்டாம் என தெறித்து ஓடும் நாயகர்கள் .

யசோதா திரைப்படம் எப்படி இருக்கு.! முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5) 7

விளம்பரம்
படத்தின் நெகட்டிவ் விஷயங்கள்
  1. ஆமை வேகத்தில் சென்ற முதல் பாதி .
  2. எப்போது கதைக்கு உள்ளே செல்வீர்கள் என்று நாம் கேட்கும் அளவிற்கு, பொறுமையை சோதிக்கும் விதமாக அமைந்த முதல்பாதி.
  3. மோசமான VFX வேலைப்பாடுகள்.
  4. தேவையில்லாத சென்டிமென்ட் காட்சிகள் மற்றும் பாடல்கள் கிரிஞ்ச் பீலிங்கை கொடுத்தது.
  5. தனது தங்கைக்காக பணம் ஈட்ட செல்லும் சமந்தா. இறுதியில் அந்த தங்கை என்ன ஆனார் என்பதே தெரியவில்லை.
  6. சில இடங்களில் லாஜிக்கே இல்லாமல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
  7. கிளைமாக்ஸ்-ல் பத்து நிமிடத்திற்கு முன்பு வரை என்ன நடக்கிறது என்று தெரியாமல் கடைசி 10 நிமிடத்தில் மொத்த கதையையும் சொல்லுவது.

யசோதா படத்திற்கு தமிழ்கிளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் – 3.25/5

விளம்பரம்

Leave a Comment