கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை விஜி சந்திரசேகரின் மகளின் திருமணம்.! வந்து குவிந்த பிரபலங்கள்.!

நடிகை விஜி சந்திரசேகர் அவர்களின் மூத்த மகளின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த திருமணத்தில் நட்சத்திரங்கள் பலரும் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கின்றனர். அந்த புகைப்படங்களை தற்போது விஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை விஜி சந்திரசேகரின் மகளின் திருமணம்.! வந்து குவிந்த பிரபலங்கள்.! 1

விளம்பரம்

தமிழில் வெளியான ‘தில்லுமுல்லு’ படத்தில் ரஜினிகாந்தின் சகோதரியாக நடித்து திரை உலகில் அறிமுகமானவர் விஜி சந்திரசேகர். இந்தப் படத்திற்குப் பின்னர் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் அவர் ‘கிழக்குச் சீமையிலே, ‘இந்திரா’ போன்ற படங்களில் நடித்தார்.

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை விஜி சந்திரசேகரின் மகளின் திருமணம்.! வந்து குவிந்த பிரபலங்கள்.! 3

விளம்பரம்

90களுக்கு பின்னர் நடிப்பை நிறுத்திய அவர், 2001ம் ஆண்டு வெளியான ‘பார்த்தாலே பரவசம்’ படத்தின் மூலமாக மீண்டும் திரைத்துறைக்கு திரும்பினார். பின்னர் ‘ஆயுத எழுத்து’, ‘ஆரோகணம்’, ‘மதயானைக் கூட்டம்’ ‘வெற்றிவேல், காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘கேப்டன் மில்லர்’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை விஜி சந்திரசேகரின் மகளின் திருமணம்.! வந்து குவிந்த பிரபலங்கள்.! 5

விளம்பரம்

தற்போது கைவசம் பெயரிடப்படாத மூன்று படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பந்தம்’ ‘ரேவதி’ போன்ற படம் நாடகங்களிலும், பின்னர் ‘அலைகள்’, ‘அண்ணாமலை’, ‘கோலங்கள்’, ‘அழகி’, ‘சந்திரகுமாரி’ போன்ற பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

தொடர்புடையவை  எழில், அமிர்தாவை நேரில் சந்தித்த கணேஷ்.! எழிலுக்கும் கணேஷுக்கு வெடிக்கும் மோதல்.!

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை விஜி சந்திரசேகரின் மகளின் திருமணம்.! வந்து குவிந்த பிரபலங்கள்.! 7

விளம்பரம்

மேலும் ‘உறவைத் தேடி’ என்ற சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சியும் அவர் தொகுத்து வழங்கியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் குறும்படங்களிலும் நடித்திருக்கிறார் விஜி. இவர் நடிகை சரிதாவின் தங்கையாவார்.

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை விஜி சந்திரசேகரின் மகளின் திருமணம்.! வந்து குவிந்த பிரபலங்கள்.! 9

விளம்பரம்

இவருக்கு சந்திரசேகர் என்பவருடன் 1995ம் ஆண்டு திருமணமானது. இவருக்கு சுரக்ஷா மற்றும் லவ்லின் என்கிற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் லவ்லினும் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார்.

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை விஜி சந்திரசேகரின் மகளின் திருமணம்.! வந்து குவிந்த பிரபலங்கள்.! 11

விளம்பரம்

ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியான ‘அயலி’ திரைப்படத்தின் மூலமாக பலரின் மனங்களை கொள்ளை கொண்டிருந்தார் லவ்லின். இந்த நிலையில் விஜி சந்திரசேகரின் மூத்த மகள் சுரக்‌ஷாவின் திருமணம் இன்று நடைபெற்று முடிந்திருக்கிறது.

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை விஜி சந்திரசேகரின் மகளின் திருமணம்.! வந்து குவிந்த பிரபலங்கள்.! 13

விளம்பரம்

இந்த திருமணத்தில் சமுத்திரக்கனி, விஜயகுமார், அருண் விஜய், அருண் விஜயின் சகோதரிகள் அனிதா, கவிதா போன்ற திரைப் பிரபலங்கள் பலரும் நேரில் வந்து வாழ்த்தி இருக்கின்றனர்.

விளம்பரம்

Leave a Comment