கோபியுடன் செல்ல முடிவெடுத்த இனியா? அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் பாக்கியலட்சுமி குடும்பம்

பாக்கிய லெட்சுமி சீரியலில் இனியா கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அங்கு வரும் கோபி இனியாவை அழைத்துக் கொண்டு பாக்கியலெட்சுமி வீட்டிற்கு கோபி இனியாவை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல திட்டமிடுகிறார். இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கிறது பாக்கியலெட்சுமி. இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பான இந்த தொடரில் பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. கோபி முதல் மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவி ராதிகாவுடன் வாழ்ந்து வருகிறார். ஆனாலும் தன் பிள்ளைகள் மீது பாசமாக இருந்து வருகிறார் கோபி. குறிப்பாக தனது கடைசி மகள் இனியா மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோபியுடன் செல்ல முடிவெடுத்த இனியா? அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் பாக்கியலட்சுமி குடும்பம் 1

விளம்பரம்

இனியா பள்ளியில் அமர்ந்து கொண்டு நண்பர்களுடன் வீடியோ பார்த்துக் கொண்டு இருக்கிறார். அதை இனியாவின் ஆசிரியர்கள் பார்த்துவிட்டனர். இதனால் கோபமான ஆசிரியர்கள் வீட்டில் இருந்து பெற்றோர்களை அழைத்து வருமாறு கூறுகின்றனர். மற்ற மாணவிகள் அவரது பெற்றோர்களை அழைத்து வந்துவிட்டனர். ஆனால் இனியா தனது பெற்றோர்களை அழைத்து வரவில்லை. இதனால் வகுப்பறைக்கு வெளியே நிற்கிறார். பின்னர் கோபிக்கு போன் செய்து பள்ளிக்கு வரவழைக்கிறார். அங்கு வரும் கோபி இனியாவுக்காக பரிந்து பேசி ஆசிரியரிடம் திட்டு வாங்குகிறார். மேலும் இனியாவின் தோழியின் அம்மா இனியாவிற்கு போன் செய்து ஆசிரியர் பள்ளிக்கு அழைத்த உண்மைகளை கூறிவிடுகிறார்.

தொடர்புடையவை  மனைவியுடன் சேர்ந்து ட்ரெண்டிங் பாடலுக்கு செம்ம cute ஆக ஆடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா.!

கோபியுடன் செல்ல முடிவெடுத்த இனியா? அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் பாக்கியலட்சுமி குடும்பம் 3

விளம்பரம்

இதனால் பதறிப் போன பாக்கியலெட்சுமி பள்ளிக்கு வருகிறார். அங்கு ஆசிரியர் கோபி வந்த விசயத்தை கூற, கோபம் அடைகிறார் பாக்கியா. வீட்டிற்கு வரும் பாக்கியா வீட்டில் உள்ள அனைவரிடமும் உண்மைகளை கூற, அனைவரும் இனியாவை திட்டுகின்றனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறும் இனியாவை கோபி தன்னுடன் அழைத்துச் செல்ல திட்டமிடுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the below Video.!

விளம்பரம்

 

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment