விஜய் டிவியின் பிரபலங்கள் எது செய்தாலுமே அது வைரல் ஆகிவிடுவது வழக்கம். அந்த வகையில் கேபி செய்துள்ள செயல் ஒன்று தற்போது வைரல் ஆகியுள்ளது. மழைக்காலத்தில் சாப்பாடு இல்லாமல் அவதிப்படும் 500 தெரு நாய்களுக்கு தானே சமைத்து உணவு அளித்துள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான 7C என்ற சீரியல் மூலமாக அறிமுகமானவர் கேப்ரியல்லா. பின்னர் இவருக்கு 3 படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறிது வளர்ந்த பின்னர் இவர் பல நடன போட்டிகளில் பங்கேற்று வந்தார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்று இருக்கிறார். இதில் சிறப்பாக நடனம் ஆடி பலரின் உள்ளங்களை கவர்ந்து இருந்தார். பின்னர் ஜோடி நம்பர் ஒன் சீசன் 6ல் பங்கேற்ற இவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். பின்னர் படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்ததால் பிக்பாஸ்-ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 4ல் ஒரு போட்டியாளராக களம் இறங்கினார் கேபி. இதில் இவர் சுரேஷ் சக்கரவர்த்தியின் தோள் மீது ஏறி நின்ற எபிசோடு மிக வைரலானது. மேலும் மக்களின் ஆதரவு இவருக்கு பெரிய அளவில் இல்லாததால் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் கேபிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நாடகத்தில் காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார் கேப்ரியல்லா. சமூக வலைத்தளங்களில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் கேபி தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். மழைக்காலத்தில் சாப்பாடு இல்லாமல் அவதிப்படும் 500 தெரு நாய்களுக்கு தானே சமைத்து உணவு அளித்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த பலரும் கேபியை பாராட்டி வருகின்றனர்.