நயன்தாராவின் இரட்டை குழந்தைகளை பார்க்க ஓடோடி சென்ற ராதிகா.! வெளியான அழகிய புகைப்படம்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தைகளை பார்ப்பதற்காக நடிகை ராதிகா அவர்களின் இல்லத்திற்கு சென்றிருக்கிறார். அந்த அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தமிழில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவருக்கு கடந்த ஜூன் மாதம், தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடைபெற்றது. விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். அந்த திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வந்தனர். திருமணம் முடிந்து நான்கே மாதங்களில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக சமீபத்தில் அறிவித்திருந்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நயன்தாராவின் இரட்டை குழந்தைகளை பார்க்க ஓடோடி சென்ற ராதிகா.! வெளியான அழகிய புகைப்படம் 1

விளம்பரம்

 

இவர்கள் இருவரும் வாடகை தாய் முறையில் குழந்தை பெற்று இருப்பதாக இணையத்தில் சர்ச்சை எழுந்தது. மேலும் வாடகை தாய் முறைக்கு திருமணமாகி குறைந்தது 5 வருட இடைவெளி இருக்க வேண்டும் என்பதால், நயன்தாரா மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்து வந்தது. ஆனால் நயன்தாராவுக்கும் விக்னேஷ் இவனுக்கும் கலந்த 2016 ஆம் ஆண்டே பதிவு திருமணம் நடைபெற்று உள்ளது. அந்த சான்றிதழ் எல்லாம் நயன்தாராவின் தரப்பினர் அரசிடம் சமர்ப்பித்த பின்னர் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. சமீபத்தில் தனது இரட்டை குழந்தைகளுடன் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் தங்களது தல தீபாவளியை கொண்டாடி இருந்தனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருந்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  அமீர் சும்மா சொல்ல கூடாதுயா.! வேற லெவல் டான்ஸ்..அடுத்த பிரபு தேவா நீதான்யா

நயன்தாராவின் இரட்டை குழந்தைகளை பார்க்க ஓடோடி சென்ற ராதிகா.! வெளியான அழகிய புகைப்படம் 3

இந்த நிலையில் நடிகை ராதிகா இன்று நயன்தாராவின் வீட்டிற்குச் சென்று, அவரது இரட்டை குழந்தைகளை பார்த்திருக்கிறார். நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், ஒரு நல்ல டீயுடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களின் இரட்டைக் குழந்தைகளை சந்தித்தேன். அதில் தமக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று பதிவிட்டு இருக்கிறார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment