ஆதரவற்ற ஏழை குழந்தைகளுடன் 45வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய அருண் விஜய்.!

நடிகர் அருண் விஜய் இன்று தனது 45 ஆவது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தமிழ் உலகின் பழம்பெரும் நடிகராக இருக்கும் விஜயகுமாரின் மகன்தான் அருண் விஜய். விஜயகுமாருக்கும் அவரது மூத்த மகனுக்கும் பிறந்தவர் அருண் விஜய்.

ஆதரவற்ற ஏழை குழந்தைகளுடன் 45வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய அருண் விஜய்.! 1

விளம்பரம்

இவர் வாரிசு நடிகர் என்கிற அடையாளத்தோடு அறிமுகமானாலும் பின்னர் தன்னுடைய திறமையால் இன்று தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் 1995ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்கிற படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் “பாண்டவர் பூமி” என்கிற படத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

ஆதரவற்ற ஏழை குழந்தைகளுடன் 45வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய அருண் விஜய்.! 3

விளம்பரம்

பல வருடங்களாக நடித்தாலும், அவர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை. பின்னர் இயற்கை, ஜனனம், தவம், மாஞ்சா வேலு, தடையற தாக்க, என்னை அறிந்தால், தடம், குற்றம் 23 போன்ற படங்களில் நடித்துள்ளார். இதில் தடம் படம் இவருக்கு புகழை வாங்கி கொடுத்தது. இவர் கடைசியாக யானை மற்றும் சினம் என்கிற இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார்.

தொடர்புடையவை  தென்னிந்திய சினிமாவில் நடிக்கும் போது மூளையை கழட்டி வைத்து விட்டு வருவேன்.! வில்லன் நடிகர் சர்ச்சை பேச்சு.!

ஆதரவற்ற ஏழை குழந்தைகளுடன் 45வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய அருண் விஜய்.! 5

விளம்பரம்

அவரது மகனுடன் இணைந்து ஓ மை டாக் என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது பார்டர் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஷூட்டிங் எல்லாம் முடிந்த நிலையில் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் அருண் விஜய்.

ஆதரவற்ற ஏழை குழந்தைகளுடன் 45வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய அருண் விஜய்.! 7

விளம்பரம்

இதற்காக அவர் சென்னையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் இல்லத்திற்கு சென்று அவர் அந்த குழந்தைகளுடன் தனது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். இந்த கொண்டாட்டத்தின் போது அருண் விஜயின் மகன் மற்றும் மகள் உடன் இருந்தனர். குழந்தைகள் முன்னிலையில் கேக் வெட்டி அவர்களுக்கு இனிப்புகளை ஊட்டினார்.

ஆதரவற்ற ஏழை குழந்தைகளுடன் 45வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய அருண் விஜய்.! 9

விளம்பரம்

பின்னர் குழந்தைகளுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களுடன் சேர்ந்து மதிய உணவையும் அவர் சாப்பிட்டு இருந்தார். அவரின் இந்த செயல் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பலரும் அருண் விஜய்க்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆதரவற்ற ஏழை குழந்தைகளுடன் 45வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய அருண் விஜய்.! 11

விளம்பரம்

மேலும் ராயப்பேட்டையில் மருத்துவமனையில் நடந்த ரத்ததான முகாமில் கலந்து கொண்டார். அவரது ரசிகர்களும் இந்த முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

விளம்பரம்

Leave a Comment