காருக்குள் கையை விட்டு விஜயை கிள்ள போன ரசிகர்.! பட்டென்று கண்ணாடியை மூடிய விஜய்.!

சென்னை பனையூரில் இருந்து தனது நீலாங்கரை வீட்டிற்கு விஜய் கிளம்பும்பொழுது அவரது கன்னத்தை பிடித்து கிள்ளிய ரசிகரால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பதறிப் போன விஜய் தனது கார் கண்ணாடியை அவசரமாக மூடிக்கொண்டு காரில் இருந்து வேகமாக கிளம்பினார். தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் இன்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பதற்காக பனையூர் வீட்டில் மிகப்பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். விஜய் ரசிகர் மன்றம் பல ஆண்டுகளாக விஜயின் தந்தை சந்திரசேகர் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்பு சில ஆண்டுகளாக நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விஜய்க்கும் அவரது தந்தை சந்திரசேகருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பேசிக் கொள்வதில்லை.

காருக்குள் கையை விட்டு விஜயை கிள்ள போன ரசிகர்.! பட்டென்று கண்ணாடியை மூடிய விஜய்.! 1

விளம்பரம்

இந்த நிலையில் விஜய் என்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சிந்திப்பதற்காக தனது பனையூர் வீட்டில் சிறப்பு ஏற்பாட்டை செய்திருந்தார். ரசிகர்களுக்கு பிரியாணி, சிக்கன் 65 என மிகப் பெரிய விருந்தே நடைபெற்றுள்ளது. வெள்ளை சட்டையில் விஜய் என்ட்ரி கொடுத்தார். அப்போது அங்கு சுற்றி இருந்தவர்கள் கத்த தொடங்கியதால், அனைவருக்கும் ஃபிளையிங் கிஸ் கொடுத்து உற்சாகப்படுத்தினார். பின்னர் உள்ளே சென்ற பின்னர் பின்பு அங்கு நிர்வாகிகளுடன் சில மணி நேரங்கள் மீட்டிங் நடைபெற்றது. மீட்டிங் முடிந்து மீண்டும் தனது நீலாங்கரை வீட்டிற்கு திரும்புவதற்காக வெளியில் காரில் ஏற முயற்சித்தார் விஜய். இன்று ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு இருப்பது தெரிந்து காலை முதலே ரசிகர்கள் அனைவர் வீட்டில் குவிய தொடங்கினர்.

தொடர்புடையவை  இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயான நயன்தாரா.! புகைப்படத்துடன் பதிவிட்ட விக்னேஷ் சிவன்

காருக்குள் கையை விட்டு விஜயை கிள்ள போன ரசிகர்.! பட்டென்று கண்ணாடியை மூடிய விஜய்.! 3

விளம்பரம்

இதனால் கட்டுக்கடங்காத கூட்டம் அந்த வீட்டின் முன்பாக இருந்தது. இந்த நிலையில் காரில் அமர்த்து இருந்த விஜயின் கன்னத்தை ரசிகர் ஒருவர் கண்ணாடி வழியாக விட்டு கிள்ளினார். இதனால் பதறிப்போன நிர்வாகிகள் அந்த ரசிகரை பிடித்து பின்னே தள்ளினர். மேலும் விஜய் சிரித்துக் கொண்டே தனது கார் கண்ணாடியை வேகமாக மூடிக்கொண்டு கிளம்பினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the below Video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Polimer News

விளம்பரம்

Leave a Comment