சின்னத்திரை நடிகை மகாலட்சுமி தனது கணவர் ரவீந்தரை வர்ணித்து தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். சினிமா தயாரிப்பாளராக இருந்த ரவீந்தரை தற்போது காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி. இவர்கள் திருமணம் ஆனது முதல் தினமும் ஏதாவது ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை போட்டு வருகின்றனர். இவர் மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்ட போது பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். உண்மையான காதலுக்கு நிறமோ அழகோ தேவையில்லை என்பதை இருவரும் நிரூபித்து காட்டியிருந்தனர். ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இருவரும் காதலித்து வந்த நிலையில், திருப்பதியில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணத்திற்கு திரை உலகில் இருந்து யாரையும் அழைக்காமல் மிக ரகசியமாக திருமணத்தை முடித்து இருந்தனர். பின்னர் இவர் புகைப்படத்தை வெளியிட்ட பின்பு தான் இவர்களுக்கு திருமணம் முடிந்த செய்தியே அனைவருக்கும் தெரிந்திருந்தது. பலரும் இந்த ஜோடியை வாழ்த்தியிருந்தனர். ஆனால் சிலர் இவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். நயன்தாராவின் திருமணத்திற்கு பிறகு அதிகமாக பேசப்பட்ட திருமணமாக இது இருந்து வருகிறது. இருவரும் அடிக்கடி வெளியில் செல்வது, கோவில்களுக்கு செல்வது என்று புகைப்படங்களை தங்களது instagram பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்த பதிவுகளுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வந்த இவர்கள் ஒரு கட்டத்தில் பேட்டி கொடுப்பதையே நிறுத்தினர்.

தற்போது இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். தொடர்ந்து மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள், மனைவிக்கு கார் அளிக்கும் புகைப்படங்கள், அவருக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படங்கள், ஹோட்டலுக்கு செல்லும் புகைப்படங்கள் ஆகியவற்றை பகிர்ந்து வருகிறார் ரவீந்தர். அவருக்கு போட்டியாக அவரது மனைவி மகாலட்சுமி இன்று ஒரு பதிவை போட்டு இருக்கிறார். அதில் கணவருடன் டின்னர் சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில் கேப்ஸனாக சண்டே ஸ்பெஷல் டின்னர் வித் ஸ்பெஷல் மேன் மை புருஷா என்று பதிவிட்டு இருக்கிறார். பலரும் அவரை Fat மேன் என்று கிண்டல் செய்து வர அவர் Fat மேன் இல்லை என்னுடைய ஸ்பெஷல் மேன் என்று கணவரை வர்ணித்து தள்ளி இருக்கிறார் மகாலட்சுமி.