நடிகை ஸ்ரீதேவியின் சென்னை வீட்டை பார்த்து இருக்கீங்களா? ஸ்ரீதேவியின் ஹோம் டூர் வீடியோ.!

தயாரிப்பாளரான போனி கபூரின் மனைவியான நடிகை ஸ்ரீதேவி சென்னையில் மிகப் பிரம்மாண்டமான வீடு ஒன்றை கட்டியிருந்தார். அந்த வீட்டில் தற்போது போனி கபூரும், அவரது மகள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர் வசித்து வருகின்றனர். தற்போது அந்த வீட்டை சுற்றி காண்பித்து ஜான்வி கபூர் ஹோம் டூர் வீடியோவை போட்டு இருக்கிறார். மில்லியன் பார்வையாளர்களை அந்த வீடியோ கடந்துள்ளது. தமிழின் மறக்க முடியாத ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தவர். 1969 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார். பின்னர் கதாநாயகியாக இவர் கே பாலச்சந்தரின் மூன்று முடிச்சு திரைப்படத்தில் 1976 ஆம் ஆண்டு நடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகை ஸ்ரீதேவியின் சென்னை வீட்டை பார்த்து இருக்கீங்களா? ஸ்ரீதேவியின் ஹோம் டூர் வீடியோ.! 1

விளம்பரம்

பின்னர் இவர் 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், குரு, ஜானி, வறுமையின் நிறம் சிகப்பு, வாழ்வே மாயம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடைசியாக 2012 ஆம் ஆண்டு இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்திலும், 2015 ஆம் ஆண்டு புலி படத்திலும் நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருக்கிறார். இவருக்கும் இந்தி திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருக்கும் 1996 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். ஸ்ரீதேவி 2018 ஆம் ஆண்டு துபாயில் மாரடைப்பு காரணமாக காரணமானார் என்று தகவல் வெளியானது. ஆனால் அவரின் உடற்கூறு அறிக்கையில் அவர் நீரில் மூழ்கி இறந்ததாகவும், அவரது ரத்தத்தில் மதுபானம் கலந்திருந்ததாகவும் கூறப்பட்டது. பின்னர் அவரது உடல் மும்பையில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

தொடர்புடையவை  மீண்டும் பைக் ரைடு கிளம்பிய நடிகர் அஜித்..! வைரலாகும் செம்ம மாஸான புகைப்படங்கள்..!

நடிகை ஸ்ரீதேவியின் சென்னை வீட்டை பார்த்து இருக்கீங்களா? ஸ்ரீதேவியின் ஹோம் டூர் வீடியோ.! 3

விளம்பரம்

தமிழில் முன்னணி நடிகையாக அவர் கொடிகட்டி பறந்தபோது சென்னையில் அவர் மிகப்பிரமாண்டமான ஒரு வீட்டை கட்டி இருக்கிறார். அந்த வீட்டை சுற்றி காட்டி அவரது மகள் ஜான்வி கபூர் ஹோம் டூர் வீடியோ ஒன்றை போட்டு இருக்கிறார். வீட்டில் அனைத்து பொருட்களும் மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது. மேலும் பல இடங்களில் ஸ்ரீதேவி வரைந்த ஓவியங்கள் ஆங்காங்கே போட்டோக்களாக பார்க்க முடிகிறது. ஸ்ரீதேவி இறந்த பின்பு விறகு நாட்களாக சென்னையில் உள்ள அந்த வீட்டிற்கு போனி கபூர் வரவில்லை என்றும் மீண்டும் புனரமைத்து தற்போது நானும் எனது தங்கையும் இங்கு வந்திருக்கிறோம் என்று பேசி இருக்கிறார் ஜான்வி. மேலும் ஸ்ரீதேவியின் குழந்தை பருவம் தொடங்கி அவர் இறக்கும் வரை பல புகைப்படங்களை ஒரு இடத்தில் மாட்டி வைத்திருக்கிறார்.

நடிகை ஸ்ரீதேவியின் சென்னை வீட்டை பார்த்து இருக்கீங்களா? ஸ்ரீதேவியின் ஹோம் டூர் வீடியோ.! 5

விளம்பரம்

அந்த வீட்டைப் பற்றியும் பல நிகழ்வுகளை ஜான்விகபூர் பகிர்ந்து கொண்டுள்ளார். குழந்தை பருவத்தை பெரும்பாலான நேரங்களில் தான் இந்த வீட்டில் தான் செலவிட்டதாகவும், ஸ்ரீதேவி ஒரு கண்டிப்பான தாயார் என்றும், தனது அறையில் உள்ள குளியலறைக்கு பூட்ட அனுமதி இல்லை. அந்த அறைக்கு பூட்டே இல்லை. ஏனென்றால் தான் பாத்ரூமில் சென்று கதவை சாத்திவிட்டு ஆண் நண்பர்களுடன் உரையாடுவேன் என்பதால் ஸ்ரீதேவி பாத்ரூமில் பூட்டு வைக்கவில்லை என்று பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் ஜான்வி கபூர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Vogue India

விளம்பரம்

Leave a Comment