தனது திருமணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பாக்கியலெட்சுமி சீரியல் நடிகை ரித்திகா இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆலியா மானசா சஞ்சீவ் நடித்த ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் ரித்திகா. கோயம்புத்தூரை சேர்ந்த ரித்திகாவின் இயற் பெயர் தமிழ்செல்வி. நடிப்பின் மீது இருக்கும் ஆர்வம் காரணமாக சில குறும்படங்களில் நடித்து வந்தார். பின்னர் இவருக்கு விஜய் டிவியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சில காரணங்களால் இவர் ராஜா ராணி தொடரில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது. அதற்குப் பின்னர் இவரால் தொடர்ந்து நாடகங்களில் நடிக்க முடியாமல் போனது.

பின்னர் இவருக்கு குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசித்த அந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்தார் ரித்திகா. இந்த நிகழ்ச்சியில் அவர் பாலாவுடன் இணைந்து பல சேட்டைகளை செய்தார். இது பார்ப்பதற்கே மிக நன்றாக இருந்தது. ஆனால் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது. வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த போதும் இவரால் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார். பிறகு இவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அந்த சீரியலில் அம்ருதா என்னும் கதாபாத்திரத்தில் இவர் எழிலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தற்போது இவருக்கு ரகசியமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. விஜய் டிவியில் வேலை செய்யும் ஒருவருடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. கிரியேட்டிவ் டைரக்டராக இருக்கும் வினு என்பவர் உடன் இவருக்கு காதல் மலர்ந்தது. இவர்களின் இருவரின் திருமணம் கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் வைத்து எளிமையாக நடைபெற்றது. இருவருக்கும் திருமண வரவேற்பு விரைவில் சென்னையில் நடைபெற இருக்கிறது. திருமணம் முடிந்த பிறகு முதல் முறையாக தனது கணவருடன் கேரளா புடவையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு திருமணத்திற்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டு இருக்கிறார். அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
