ரட்சிதாவின் கணவர் தினேஷ், ராபர்ட் மாஸ்டர் வெளியே போக வேண்டும் என்றும், அவருக்கு பதிலாக வாய்ப்பு தேடி உள்ளே சென்றிருக்கும் மணி மற்றும் ராமை ஆதரிக்க வேண்டும் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். மேலும் ராபர்ட் மாஸ்டரை ரட்சிதா நாமினேட் செய்த போது அதை தன்னால் பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை என்றும் அவர் பதிவிட்டு இருக்கிறார். ரட்சிதாவின் கணவரும் ரட்சிதாவும் கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவருக்கும் விவாகரத்து கூட ஆகவில்லை. இந்த நிலையில் பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள ரட்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் கிரஷ் இருப்பது போலவும், அவரிடம் மிகுந்த அக்கறை இருப்பது போலவும் ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். இது சில சமயங்களில் எல்லை மீறி சென்று விடுகிறது.

ராபர்ட் மாஸ்டரின் இந்த நடவடிக்கைகள் ரட்சிதாவுக்கே சில சமயங்களில் பிடிக்கவில்லை என்பது அவரின் முகபாவனைகளை பார்த்தாலே தெரிந்து விடும். இந்த நிலையில் ரட்சிதாவின் கணவர் சமீப காலமாக தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்து வருகிறார் .அதில் அவர் ராபர்ட் மாஸ்டர் செய்யும் வேலைகளை தூண்டுவிடுவது மைனா தான். எனவே மைனாவும் ராபர்ட் மாஸ்டரும் வெளியே சென்றால் ரட்சிதா இந்த சீசனில், இறுதி போட்டியாளர்களில் ஒருவராக வர அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேசியிருந்தார் ய. மேலும் நீங்கள் வைல்ட் கார்டு என்று ஆக செல்வீர்களா என்று கேட்டதற்கு அந்த எண்ணத்தில் தான் இல்லை என்றும் பதிலளித்து இருந்தார். இருந்த போதிலும் ரட்சிதாவின் கணவர் தினேஷ் உள்ளே செல்ல வேண்டும் என்று பலரும் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரட்சிதாவின் கணவர் இன்று தனது instagram பக்கத்தில் இரண்டு பதிவுகளை போட்டு இருக்கிறார். முதல் பதிவில் ரட்சிதா ராபர்ட் மாஸ்டரை நாமினேட் செய்யும் வீடியோவை பகிர்ந்து இந்த வீடியோவை பார்த்தால் எனக்கு சிரிப்பாக தான் இருக்கிறது என்று பகிர்ந்திருக்கிறார். மேலும் இரண்டாவது பதிவு ஒன்றில் சினிமாவில் பல வாய்ப்புகளை கோட்டை விட்ட ராபர்ட்டுக்கு இது இரண்டாவது இன்னிங்ஸ். அதையும் கோட்டை விட்ட ராபர்ட் எலிமினேட் ஆவது தான் சரி. ராம் மற்றும் மணிகண்டன் பல கனவுகளோடு இந்த பிக்பாஸிற்கு வந்துள்ளனர். அவர்களுக்கு வோட் செய்து காப்பாற்றுவது தான் எனக்கு சரியாகப்படுகிறது. அவர்களின் கனவுகள் வெற்றி பெற வழி செய்வோம் என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Trend Talks