பிக்பாஸ் சீசன் 6ல் இந்த வாரம் வீட்டிலிருந்து வெளியேறி இருக்கும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. பிக்பாஸ் சீசன் சிக்ஸ் தொடங்கி இன்றுடன் 97 நாட்களில் நிறைவடைந்து இருக்கிறது. மீதம் 9 நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது ஏழு போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு 6 போட்டியாளர்களுடன் மீதம் இருக்கும் ஒன்பது நாட்கள் நடைபெற இருக்கிறது. அடுத்த வாரம் பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டால் அதில் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார். மீதம் இருக்கும் ஐந்து பேரை பைனலுக்கு அனுப்ப பிக்பாஸ் குழு திட்டமிட்டு இருக்கிறது முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு 21 போட்டியாளர்களும் தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் தற்போது ஆறு போட்டியாளர்களாக சுருங்கி இருக்கிறது. டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் அமுதவாணன் நேரடி பைனலுக்கு சென்று இருக்கும் நிலையில் மீதம் இருக்கும் நான்கு பேரை மட்டும் ஃபைனலிஸ்டாக தேர்வு செய்ய பிக்பாஸ் திட்டமிட்டு இருக்கிறது.

இந்த வார நாமினேஷனில் அமுதவாணனை தவிர அசீம், விக்ரமன், ஏடிகே, கதிரவன், மைனா, ஷிவின் என மொத்தம் ஆறு பேர் நாமினேட் ஆகியிருந்தனர். இந்த வாரம் எலிமினேட் ஆகி சென்ற அனைத்து போட்டியாளர்களையும் வீட்டிற்கு உள்ளே அனுமதித்திருக்கின்றனர். இன்னும் ஆயிஷா, ரட்சிதா, ஜனனி ஆகிய மூன்று பேர் மட்டும் உள்ளே வரவில்லை. உள்ளே வந்த போட்டியாளர்கள் வீட்டில் இருப்பவர்களை ட்ரிகர் செய்ய ஆரம்பித்துள்ளனர். மேலும் சாக்ரிபைஸ் டாஸ்க் என்ற பெயரில் அவர்கள் கொடுத்த சில டாஸ்க்குகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. மீசையை எடுக்க சொல்லுவது, தலையை பாதியாக மொட்டை அடித்துக் கொள்ளச் சொல்வது என்று உள்ளே வந்த போட்டியாளர்களின் டாஸ்க்கள் வன்மம் நிறைந்ததாக இருந்ததாக வெளியில் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்து வந்த நிலையில், ஏடிகே வெளியேறி உள்ளதாக தெரிகிறது. இலங்கையை சேர்ந்தவர் ஏடிகே. பிரபல ராப் பாடகராக இருந்த இவர் ஏ ஆர் ரகுமான், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். பல பிரபலமான பாடல்களை பாடி இருக்கிறார். ஆனால் அந்த பாடல்களை எல்லாம் இவர்தான் பாடியிருக்கிறார் என்பது இவர் பிக்பாஸில் கலந்து கொண்ட பின்னர் தான் அனைவருக்கும் தெரிய வந்தது. தனது முகம் பரிச்சயமாக வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் ஏடிகே உள்ளே வந்தார். அது நிறைவேறி இருப்பதாகவே தெரிகிறது. இத்தனை நாள் ஏடிகேவை வாக்களித்து காப்பாற்றி வந்த மக்கள் இந்த வாரம் குறைவான வாக்குகளை அளித்து அவரை வீட்டிலிருந்து வெளியேற்றி இருக்கின்றனர்.