உண்மையான பொங்கல் வின்னர் இவருதான்.! வெளியான அதிர்ச்சி தகவல்.! 3வது நாள் வசூல் நிலவரம்.!

துணிவு மற்றும் வாரிசு இரு படங்களின் மூன்றாவது நாள் கலெக்சன் குறித்து தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் உண்மையான வின்னர் இந்த படம் தான் என்று கூறிவரும் நிலையில், தற்போது யார் வசூலை அதிகமாக கொடுத்திருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் இரு பெரும் துருவங்களாக இருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவர்களும் நண்பர்களாக இருக்கும் போதிலும், இவரது ரசிகர்கள் எப்போதும் எதிரும் புதிருமாகவே இருந்து வருவது வழக்கமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த பொங்கலுக்கு இருவரின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது முதலே அலப்பறை, கலாட்டா, கொண்டாட்டம் என்று அனைத்து விதமான எமோஷன்களையும் கொட்டி தீர்த்து விட்டனர் இருவரின் ரசிகர்கள். இந்த நிலையில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி துணிவு மற்றும் வாரிசு இரு படங்களும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

உண்மையான பொங்கல் வின்னர் இவருதான்.! வெளியான அதிர்ச்சி தகவல்.! 3வது நாள் வசூல் நிலவரம்.! 1
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இரண்டு படங்களுக்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது. இருந்தபோதிலும் வசூல் ரீதியாக இரண்டு படங்களும் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் எழுந்த பெரும் எழுச்சியின் காரணமாக முதல் நாளே துணிவு படம் 19 கோடி வசூலையும், வாரிசு படம் 17 கோடி வசூலையும் பெற்று இருந்ததாக பிரபல திரைப்பட அனலிஸ்ட் ஆன ரமேஷ் பாலா தனது twitter பக்கத்தில் தெரிவித்து இருந்தார். தமிழகத்தில் துணிவு படம் அதிகமான வசூலை பெற்றிருந்த போதிலும் உலக அளவில் வசூலை ஒப்பிடும்போது வாரிசு படமே முதலிடத்தை பிடித்திருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் விடுமுறை என்பதால் படத்திற்கான வசூல் மேலும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று நாள் முடிவில் இரண்டு படங்களும் பெற்ற வசூல் நிலவரம் குறித்து தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் துணிவு படமே இன்றைக்கும் முன்னிலையில் இருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  அன்ஷிதா கதையை கேட்டு கதறி அழுத போட்டியாளர்கள்..! Bigg Boss Promo..!

உண்மையான பொங்கல் வின்னர் இவருதான்.! வெளியான அதிர்ச்சி தகவல்.! 3வது நாள் வசூல் நிலவரம்.! 3

துணிவு படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 43 கோடி வசூலையும், வாரிசுப்படம் 40 கோடி வசூலையும் பெற்றிருக்கிறது. மூன்றாவது நாள் முடிவிலும் துணிவு படமே முன்னிலையில் இருக்கிறது. மூன்று நாட்களாக படக் குழுவினர் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இரண்டு படங்களின் படக்குழுவினரும் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். அதில் ரியல் வின்னர் என்று துணிவு படத்தின் போஸ்டரை போனி கபூர் வெளியிட்டு இருக்கிறார். மேலும் பொங்கல் வின்னர் தி பாஸ் ரிட்டன்ர்ஸ் என்று வாரிசு படத்தின் புதிய போஸ்டரும் வெளியாகி இருக்கிறது..! பொங்கல் பண்டிகை மூன்று நாட்கள் விடுமுறை என்பதாலும் வார இறுதி நாட்கள் என்பதாலும், இந்த வாரம் இரண்டு படங்களும் வசூல் வேட்டையை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment