சமுத்திர குமாரியின் “அலைகடல்” பாடல்.! Full வீடியோ Song வெளியானது.!

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து அனைவரின் மனதை மயக்கிய மெலடி பாடலான அலை கடல் பாடலில் முழு வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தில் ஓடம் செலுத்தும் பூங்குழலிக்காக அமைக்கப்பட்ட இந்தப் பாடல் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் அழகான காட்சிப்படுத்துதல் நடுவில் மிகப் பிரம்மாண்டமாக அமைந்திருந்தது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி உலக அளவில் கோடிகளில் வசூலை குவித்து வரும் ஒரு திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் திரைப்படம். தமிழர்களின் பெருமையையும் சோழர்களின் வீரத்தையும் பறைசாற்றும் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் அழகாக படமாக்கி இருந்தார். இந்த படத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்திருந்தது.

சமுத்திர குமாரியின் "அலைகடல்" பாடல்.! Full வீடியோ Song வெளியானது.! 1

விளம்பரம்

இந்த படத்தில் தைரியமான அழகான ஒரு கதாபாத்திரம் என்றால் அது பூங்குழலி கதாபாத்திரம் தான். இது மிக முக்கியமான கதாபாத்திரமாகும். நாகை மாவட்டம் கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு படகு மூலமே அருள்மொழிவர்மன் மற்றும் வந்திய தேவனை அழைத்துச் செல்லும் ஒரு துணிச்சலான பெண் தான் இவர். சமுத்திர குமாரியான இவள் பாடத் தொடங்கும் போது அந்த கடல் கூட அலைகளினால் இரைச்சல் போடுவதை நிறுத்தி அவளின் பாட்டை கேட்குமாம். அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரத்தை அழகாக வடிவமைத்திருப்பார் கல்கி. இந்தப் பாடல் வெளியான போது பலரும் இந்த பாடலுக்கு அடிமையாக இருந்தனர். இரவின் அமைதியில் இரைச்சல் போடும் கடலில், சுழல் காற்றில் துடுப்பை வலித்துக் கொண்டு அவள் படகை செலுத்தும் முறையை கண்டு வியக்காதவர் உண்டோ?

தொடர்புடையவை  சிறுத்தை சிவா குறித்து சூர்யாவிடம் அஜித் சொன்ன ரகசியம்..! மேடையில் போட்டுடைத்த நடிகர் சூர்யா..!

சமுத்திர குமாரியின் "அலைகடல்" பாடல்.! Full வீடியோ Song வெளியானது.! 3

விளம்பரம்

தற்போது இந்த பாடலின் முழு வீடியோ வெளியாகி இருக்கிறது. பாடல் வரிகளுடன் அந்த வீடியோவை நீங்களும் காண..!

அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ
அடி மன தாகம் விழியில் தெரியுதோ ஏலோ ஏலேலோ
பாத மாறும் மேகம் எங்கோ தொலைந்தவள் தானோ
வானும் நீரும் சேரும் என்றோ ஒர் நாள் தானோ
ஆழியிலே தடம் எதுவும் இல்ல ஏலோ ஏலேலோ
வான் ஒளியின், மீன் ஒளியில் செல்ல ஏலோ ஏலேலோ
அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ

விளம்பரம்

இன்பம் துன்பம் இரண்டும் இடம் பொருள் மாறும்
இரவுகள் பகலாகும் முகில் மழையாகும்
முறுவலும் நீராகும்
வானெங்கும் சாயாத செஞ்சூரியன்
வராதோ ஒரு மாலை நம் பூமியில்
நான் ஒருமுறை வாழ்ந்திட
மறுகரை ஏறிட பல பல பிறவிகள் கொள்வேனா
சொல்லிடு

அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ

விளம்பரம்

பேசாத மொழி உந்தன் காவியமா
தானாக உருவான ஓவியமா
தாயின்றி கருவான ஓருயிரா
ஆதாரம் இல்லாத காதலா
கன இடைவெளியல் கரம் பிடிப்பாயா
கரை தொடும் வரையில் மணம் முடிப்பாயா
ஓர் பார்வை ஓர் வாக்கு தாராயோ

தொடர்புடையவை  மாஸ்டர் விஜய் போல் மாறிய சிவா.! பிரின்ஸ் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு.!

அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ
அடி மன தாகம் விழியில் தெரியுதோ ஏலோ ஏலேலோ
பாத மாறும் மேகம் எங்கோ தொலைந்தவள் தானோ
வானும் நீரும் சேரும் என்றோ ஒர் நாள் தானோ
ஆழியிலே தடம் எதுவும் இல்ல ஏலோ ஏலேலோ
வான் ஒளியின், மீன் ஒளியில் செல்ல ஏலோ ஏலேலோ

விளம்பரம்

Youtube video Code Embed Credits: Tips Tamil

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment