டிஜிட்டல் ஊடக சட்டம் 2019 குழப்பும் மத்திய அரசு!

சமகாலத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்தியாவில் டிஜிட்டல் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் 62.7 கோடி மக்கள் டிஜிட்டல் துறையின் வளர்ச்சியோடு ஒருங்கிணைந்து உள்ளனர்.

கார்ப்ரேட் முதல் அரசு அலுவலகம் வரையிலான அனைத்து முறை சார்ந்த நடவடிக்கைகளும் டிஜிட்டலுக்கு மாறிவிட்டன. அதே போல தொலைக்காட்சி, செய்தி தாள், அஞ்சல் வழி தகவல் பரிமாற்றம் போன்றவைகளும் டிஜிட்டல் வருகைக்கு பின்னர் மிக சுலபமாக கையில் அடங்கிவிட்டன. credit: third party image reference

விளம்பரம்

எந்த அளவிற்கு டிஜிட்டல் துறை நன்மைகளை வளர்ந்ததோ, அதே அளவிற்கு தீமைக்கும் வழிவகுத்தது. குறிப்பாக 2014ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, அமெரிக்கா தேர்தலாக இருந்தாலும் சரி டிஜிட்டல் துறை மிக பெரிய விமர்சனங்களை உருவாக்கிவிட்டது.

டிஜிட்டல் ஊடக சட்டம் 2019 குழப்பும் மத்திய அரசு! 1

இந்தியாவில் மோடிக்கு ஆதரவாக பல போலியான செய்திகளை உருவாக்கி, அதனை டிஜிட்டல் ஊடகங்களில் பரப்பி விட்டதன் மூலம் மிக பெரிய ஆதரவு தளத்தை பாஜகவிற்கு ஆதரவாக மடைமாற்றப்பட்டது. மோடியின் மாபெரும் வெற்றிக்கு பின்னரும் கூட போலி செய்திகளை கட்டுப்படுத்த முடியாமல் அனைவரும் முழி பிதுங்கி நிற்க, “பிபிசி, இந்தியா டுடே, பூம், தி குயின்ட” போன்ற செய்தி நிறுவனங்கள் டிஜிட்டல் ஊடகத்தில் வலம் வரும் போலி செய்திகளை கண்டறிவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

விளம்பரம்
தொடர்புடையவை  அதிமுகவின் ஒற்றை தலைமை பொறுப்பை ஏற்க போவது எடப்பாடி பழனிசாமி யா ?? - இபிஎஸ் வீட்டில் குவிந்த அமைச்சர்கள்!!

தனி நிறுவனங்களால் முடியாத என்ற நிலை உருவாகும் போது, மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை அறிமுகப்படுத்தி இருந்தது. அதாவது 1867ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் இயற்றப்பட்ட புத்தக மற்றும் பதிப்பகம் பதிப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தார் மத்திய அமைச்சர் பிரகாஷ். பழைய சட்டத்தின் அதே அம்சங்களை கொண்டுள்ள புதிய சட்ட திருத்தில், இரண்டே வரிகள் மட்டும் தான் டிஜிட்டல் ஊடகங்களை பற்றி விவரிக்கின்றன.

“எழுத்து வடிவத்திலோ, ஆடியோ, வீடியோ மற்றும் கிராபிக்ஸ் ஆகிய வடிவிலோ உள்ளடக்கியதாக இருந்து, இணையம் வழியாக கணினி அல்லது மொபைல் நெட்வொர்க்குகள் மூலம் பகிரப்படுமானால், அது டிஜிட்டல் ஊடகம் என்று கருதப்படும்” என்கிறது புதிய சட்ட திருத்தம்.

விளம்பரம்

வெறும் மேம்போக்காக சொல்லப்பட்டிருக்கும் இந்த சட்டத்தில் பல குழப்பங்கள் வெளிப்பட்டுள்ளன. அதாவது டிஜிட்டல் என்பது வெறும் முகநூல், டிவிட்டர், தனி இணைய தளம் ஆகியவற்றை மட்டுமே கொண்டு இயங்குவது அல்ல.

டிஜிட்டல் ஊடக சட்டம் 2019 குழப்பும் மத்திய அரசு! 3

அதாவது டிஜிட்டல் ஊடகம் இரண்டு வகைப்படுகிறது. ஒன்று முறைசார்ந்த ஊடகம் மற்றொன்று முறை சாரா ஊடகம்.

விளம்பரம்
  • முறைசார்ந்தது என்றால் ஊடகங்களாக தங்களை பதிவு செய்து செய்திகளை வெளியிட்டு வருபவர்கள்.
  • முறைசாரா ஊடகம் என்றால் வேர்ட்பிரஸ், பிளாக்கிங் மற்றும் தனி இணையம் உரிமை பெற்று பல்வேறு துறைகளை சார்ந்த தனி விருப்ப கட்டுரைகள், கதைகள் வெளியிடப்படுவது.

மாணவர்கள், ஆசிரியர்கள், எழுதுவதில் விருப்பமுள்ளோர், படித்ததை பகிர நினைப்பவர்கள் என எண்ணற்ற நபர்கள் முறை சாரதா இணைய சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். இவற்றுள்ளும் தினசரியாக செய்திகள், கட்டுரைகள் வெளியிடப்பட்டு பல ஆயிரம் பார்வையாளர்களை பெறுகிறது. ஆனால் இவையெல்லாம் எளிதாகவும், கையாள சுலபமாகவும் இருப்பதனால் தான் பல்வேறு தரப்பினர் டிஜிட்டல் ஊடகத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

தொடர்புடையவை  பொது பாதுகாப்பு சட்டத்தில் பாரூக் அப்துல்லா!

இது போன்று இருபிரிவாக பிரிந்து இயங்கும் டிஜிட்டல் ஊடகத்தை எப்படி மத்திய அராசால் ஒரு குடையின் கீழ் கொண்டுவர முடிகிறது என்பது தெரியவில்லை. இதனால் தான் மத்திய அரசின் புதிய சட்ட திருத்தம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment