தங்கம் போல விலை உயர்ந்த வெங்காயத்தை அடகு வைக்கும் மக்கள்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி வெங்காயத்தை வங்கியில் அடகு வைக்கும் நூதன போராட்டம் ராமேஸ்வரத்தில் நடைபெற்றது.

தங்கம் போல விலை உயர்ந்த வெங்காயத்தை அடகு வைக்கும் மக்கள் 1

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ராமேஸ்வரம் இந்திய வங்கி முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கழுத்தில் வெங்காய மாலை அணிந்தபடி விலை உயர்வை கட்டுப்படுத்தவும் அதற்கு காரணமான பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

விளம்பரம்
தங்கம் போல விலை உயர்ந்த வெங்காயத்தை அடகு வைக்கும் மக்கள் 3

பின்னர் தங்கம் போல நாளுக்குநாள் விலை அதிகரித்து வரும் வெங்காயத்தை அடகு வைக்கப் போவதாக கூறி போராட்டக்காரர்கள் வங்கிக்குள் நுழைய முயன்றனர்.
அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

Leave a Comment