நடிகர் ராஜ்கிரனின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா நகைகளை திருடி சென்று விட்டதாக ராஜ்கிரனின் மனைவியும், ஜீனத் பிரியாவின் தாயுமான பத்மஜோதி என்கிற கதீஜா போலீசில் புகார் அளித்திருக்கிறார். திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர்கள் இளங்கோவன் பத்ம ஜோதி தம்பதிகள். இவரின் மகள்தான் பிரியா. கடந்த 2014 ஆம் ஆண்டு இளங்கோவனை பத்மஜோதி பிரிந்து விட்டார். பின்னர் அவர் நடிகர் ராஜ்கிரனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு, பத்ம ஜோதி என்ற தனது பெயரை கதீஜா என்று மாற்றிக்கொண்டார். இளங்கோவன் பத்மஜோதியின் மகள் பிரியா தனது தாயுடன் சென்று ராஜ்கிரணுடன் வசித்து வந்தார். அவருடைய பெயரையும் ஜீனத் பிரியா என்று பெயர் மாற்றம் செய்து இருந்தார் ராஜ்கிரண். இந்த நிலையில் 37 வயதாகும் ஜீனத் பிரியா சமீபத்தில் சீரியல் நடிகரான முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் கடுப்பான ராஜ்கிரண், அந்தப் பெண் நான் வளர்த்து வந்த வளர்ப்பு மகள் தான். எனக்கும் அந்த பெண்ணுக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை. தன்னிடம் உள்ள பணத்திற்காகவும் நகைக்காகவும் தான் முனீஸ் ராஜா இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தன்னுடைய நற்பெயரை கெடுப்பதற்காகத்தான் இப்படி செய்திருக்கிறார்கள் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார் ராஜ்கிரண். இந்த நிலையில் ராஜ்கிரணின் இரண்டாவது மனைவியான பத்மஜோதி என்கிற கதீஜா தனது சொந்த மகள் பிரியா மீதே காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் 17 சவரன் நகை மற்றும் குடும்ப தாலியை ஜீனத் பிரியா எடுத்து சென்று விட்டதாகவும், மேலும் முனீஸ் ராஜா மற்றும் ஜீனத் பிரியாவின் அசல் தந்தை இளங்கோவன் ஆகியோர் மீதும் வழக்கு தொடுத்திருந்தார் கதீஜா. இதனால் ஜீனத் பிரியா விசாரணைக்காக திருச்சியில் உள்ள காவல் நிலையத்தில் ஆஜராகி இருந்தார்.

வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த ஜீனத் பிரியா, தனது ஒரிஜினல் தந்தை இளங்கோவன் மற்றும் தனது பாட்டி அளித்த 40 சவரன் நகைகளை ராஜ்கிரணுடன் சென்ற தாய் வைத்துக் கொண்டு தர மறுப்பதாகவும், தனக்கு 37 வயது வரை திருமணம் செய்து வைக்காமல் ராஜ்கிரண் வீட்டில் தன்னை வேலைக்காரியாக நடத்தியதாகவும் குற்றம் சாட்டினார். தனக்கு சேர வேண்டிய பூர்வீக நகைகளை கொடுத்து விட்டு எங்களை நிம்மதியாக வாழவிடுங்கள் என்றும் அவர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார். நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the below video..!
YouTube Video Code Embed Credits: Polimer news