
தமிழ் திரையுலகில் முதல்முறையாக ஜோதிகா, கார்த்தி இருவரும் அக்கா, தம்பி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம், தம்பி. பாபநாசம் படத்தின் இயக்குனரான ஜீத்து ஜோசப் இந்த படத்தை இயக்கியுள்ளார். மற்றும் சவுகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, ஆர்.டி.ராஜசேகர். இசை, 96 கோவிந்த் வசந்தா. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சூர்யா பேசுகையில், ‘சத்யராஜ், ஜோதிகா, கார்த்தி, ஜோதிகாவின் தம்பி தயாரிப்பாளர் சூரஜ் என்று அனைவரும் ஒரே படத்தில் இனைந்து நடித்திருக்கிறார்கள். கார்த்தியும், ஜோதிகாவும் சிறந்த நடிகர்கள். கிளிசரின் போடாமல் என்னால் அழ முடியாது.
ஆனால், கிளிசரின் பயன்படுத்தாமல் கார்த்தி அழுதுவிடுவார். இந்த நேரத்தில் ரசிகர்களுக்கு எனது முக்கிய வேண்டுகோள். எவ்வளவு அவசரம் இருந்தாலும், அதிகாலை பயணம் செய்வதை தவிர்த்துவிடுங்கள். விடியற்காலை 3 அல்லது 4 மணிக்கு பயணம் செய்வதால், சில தவறான சம்பவங்கள் நடந்துவிடுகிறது’ என்று அறிவுரை கூறினார்.