விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் ராஜா ராணி. இந்த நாடகத்தின் பாகம் 1 மிகப்பெரிய வெற்றி அடைந்ததன் காரணமாக பாகம் 2 எடுக்கப்பட்டு வருகிறது. போலீஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்ற மருமகளின் கனவை மாமியார் எப்படி நிறைவேற்றப் போகிறார்? அதற்கு கணவர் எப்படி உறுதுணையாக இருக்கப் போகிறார்? என்பது பற்றிய கதை. இது ஹிந்தி நாடகம் ஒன்றின் தமிழ் ரீமேக்கான என் கணவர் என் தோழர் என்ற கதையை அப்படியே காப்பி அடித்து எடுக்கப்பட்டதாகும். ஆனால் அந்த நாடகத்தில் மாமியார் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ள மாட்டார். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் மாமியார் மருமகளை மிகக் கொடுமை செய்வது போல் காட்டப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எதற்கெடுத்தாலும் அதற்கு தனது மருமகள் சந்தியா தான் காரணம் என்று அவர் கூறும் வசனம் சிலரை எரிச்சல் அடையவும் வைத்திருக்கிறது. தற்போது பல தடைகளைத் தாண்டி சந்தியா போலீஸ் அதிகாரியாக ட்ரைனிங்க்கு சென்று இருக்கிறார். அங்கும் அவருக்கு பல தடைகள் ஏற்படுகிறது. அதை எல்லாம் மீறி அவர் போலீஸ் அதிகாரியாக ஆவாரா? இல்லையா? என்பது குறித்த கதை தான் ராஜா ராணி சீசன் 2. தற்போது சந்தியாவின் மாமியார் சிவகாமியின் மாற்றம் பலருக்கும் ஆறுதலை கொடுத்திருக்கிறது. அவர் தனது மருமகள் சந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கோவிலில் அமர்ந்து கொட்டும் மழையில் வேண்டிக் கொண்டிருக்கிறார். இந்த மாற்றம் பலருக்கும் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. விரைவில் சந்தியா போலீஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்பதுதான் பலரின் எண்ணம்.

சந்தியாவும் அதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவர் இந்த போட்டியில் வெல்வாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Vijay Television