சின்னத்திரையில் சீரியல் நடிகராக வலம் வரும் கவினின் திருமண வரவேற்பில் பலரும் பங்கெடுத்திருக்கின்றனர். அந்த வீடியோவை கவின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு அனைவருக்கும் நன்றி கூறி இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்கிற சீரியலில் கல்லூரியின் கதையில் நடித்து பிரபலமானவர் நடிகர் கவின். அதற்கு பின் இவர் சரவணன் மீனாட்சியில் சரவணனாக நடித்தார். இந்த நாடகம் மூலமாக மிகப்பெரிய திருப்புமுனையைப் பெற்ற அவர், தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்தார். படங்களிலும் துணை வேடங்களிலும் நடித்து வந்த அவர் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டார் ஆனால் 5 லட்சம் பணத்துடன் பாதியிலேயே வெளியேறினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த கவினுக்கு லிஃப்ட் மற்றும் டாடா என்கிற இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் டாடா படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலியான மோனிகாவை திருமணம் செய்திருந்தார். சென்னையில் வைத்து நடந்த இந்த திருமணத்தில் இயக்குனர்கள் விக்னேஷ் சிவன், நெல்சன், வெற்றிமாறன், நடிகை பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் அவருக்கு நேற்று திருமண வரவேற்பு நடந்திருக்கிறது. அந்த வீடியோவை கவின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

வீடியோவை பகிர்ந்த அவர், தனது மனமார்ந்த நன்றிகள், உங்களுடைய நேரத்தை ஒதுக்கி எங்களுடன் நேரம் செலவிட்டதற்காக ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன் என்று சொல்லி அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து இருக்கிறார். பலரும் அந்த வீடியோவிற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
View this post on Instagram
Instagram Video Credits: Kavin M