பாக்கியலட்சுமி சீரியல் நடிகை தமிழ் ரித்திகாவிற்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. திருமணம் ஆகி முதல் பிறந்தநாளை தனது கணவருடன் அவர் மாலத்தீவில் கொண்டாடியிருக்கிறார். ராஜா ராணி என்கிற சீரியலின் மூலமாக அறிமுகமானவர் நடிகை ரித்திகா. இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி என்று சொன்னால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு பல ரசிகர்கள் உருவாகினர். இவரும் பாலாவும் சேர்ந்து செய்யும் மொக்கை காமெடிகளுக்கு என்றே பல ரசிகர்கள் இருந்தனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த போதிலும் ரசிகர்கள் ரித்திகாவை ஏற்றுக்கொண்டனர். சமீபத்தில் தான் ரித்திகாவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் வேலை பார்க்கும் நபர் ஒருவரையே திருமணம் செய்து கொண்டுள்ளார் ரித்திகா. திருமணம் முடிந்த கையோடு அவர் சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருந்து வருகிறார். தொடர்ந்து கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் சேர்ந்து மாலத்தீவிற்கு ஹனிமூன் சென்று இருக்கிறார்கள். அந்த புகைப்படங்களையும் ரித்திகா பதிவேற்றி இருந்தார். இந்த நிலையில் இன்று ரித்திகாவிற்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அதற்காக அவரது கணவர் மாலத்தீவில் செம சர்ப்ரைஸ் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார். கடலுக்கு அடியில் இருக்கும் உணவகம் ஒன்று இருக்கு ரித்திகாவை அழைத்துச் சென்ற அவர், அங்கு பணியாற்றும் ஊழியர்களை வைத்து கேக் வெட்டி தனது மனைவியின் பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.

அந்த வீடியோவை ரித்திகா தனது instagram பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்றும் கடலுக்கு அடியில் இருக்கும் இந்த உணவகத்தில் தனக்கு சர்ப்ரைஸ் செய்த கணவருக்கும் நன்றி என்றும் அவர் பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவிற்கு கீழே பலரும் ரித்திகாவிற்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மிகவும் க்யூட்டாக இருக்கும் அந்த வீடியோவை நீங்களும் காண, கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்.! Watch the below video..!
YouTube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7