கடற்கரையில் அத்துமீறி நுழைந்த சீன கப்பல்!!!

அந்தமான் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சீன கப்பலை இந்திய கடற்கரை துரத்தி அடித்துள்ளது. சீனாவை சேர்ந்த சியான் என்ற ஆராய்ச்சி கப்பல் செப்டம்பர் மாதம் அந்தமான் கடல் பகுதியில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது.

அதை கவனித்த இந்திய கடற்படை அந்தக் கப்பலை துரத்தியடித்தனர். சீன கப்பல் உளவு பார்த்ததாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கடற்படைத் தலைவர், அட்மிரல் கரம்பீர் சிங் ,பெருங்கடலில் சீன கப்பலின் வரவு அதிகரித்துள்ளது என குறிப்பிட்டார். இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் நுழையும் கப்பல்கள் உரிய அனுமதி பெறவேண்டும் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

சீனு கப்பல்களின் வரவுகளை கடற்படை கூர்ந்து கவனித்துக் கொண்டு இருப்பதாகவும் கடல் வழியாகவும் எல்லை தாண்டிய தீவிரவாதம் நடக்கலாம் என்பதால் அவற்றை முறியடிக்க கடற்படையின் கடலோர காவல் படையும் தயாராக இருப்பதாக கூறினார்.

விளம்பரம்

Leave a Comment