என் மூத்த புள்ள வருண் எங்கே? வருணின் அம்மாவுக்கு பழைய ஞாபகம் எல்லாம் வந்துடுச்சே.!

மௌனராகம் சீரியலில் வருணின் தாயாருக்கு பழைய நினைவுகள் எல்லாம் திரும்பி வந்துவிட்டது. அவர் தருணிடம் சென்று அவருடைய குழந்தை பருவ புகைப்படத்தை காட்டி இது நீதானா என்று கேட்கிறார். மேலும் தனது மூத்த மகன் வருண் எங்கே என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார். மௌனராகம் சீரியலில் நாளுக்கு நாள் விறுவிறுப்பை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதில் சீரியலில் கதாநாயகனாக இருக்கும் வருணுக்கு ஒரு மனநோய் இருக்கிறது. அது என்னவென்றால் அவரது தாயார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்தில் இறந்துவிட்டார் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார். அதனால் அவருக்கு நெருப்பை பார்த்தாலே பயம். தற்போது அவரது மனைவி சக்திக்கும் அது போல் ஆகிவிடும் என்று பயந்து அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார். அதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என் மூத்த புள்ள வருண் எங்கே? வருணின் அம்மாவுக்கு பழைய ஞாபகம் எல்லாம் வந்துடுச்சே.! 1

விளம்பரம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போதிலும் வருணுக்கு அந்த மன நோய் குணமாகவில்லை. சக்தியை பார்த்தாலே அவர் பயத்தில் அலற தொடங்கி விடுகிறார். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் வருணின் தாயார் தீ விபத்தில் இறக்கவில்லை. அவரை 15 ஆண்டுகளாக வருணின் அத்தை கடத்தி ஒரு வீட்டில் தனியாக அடைத்து வைத்திருக்கிறார். அவருக்கு பல மாத்திரைகள் கொடுத்து பழைய நினைவுகளை எல்லாம் மறக்கடித்து விட்டார். இந்த நிலையில் வருணின் அத்தை ஷீலா வுக்கு தெரியாமல் ஸ்ருதியும் அவரது பாட்டி ருக்மணியும் வருணின் அம்மாவை மீட்டு மீண்டும் வருணின் வீட்டிலேயே கொண்டு சேர்த்து விட்டனர். இதனால் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.  வருணின் தாயாருக்கு கொஞ்சம் கொஞ்சமாக பழைய நினைவுகள் திரும்பிக் கொண்டிருக்கிறது.

தொடர்புடையவை  ஜீ தமிழ் சீரியலில் இருந்து திடீரென விலகிய கதாநாயகி.! இவருக்குப் பதில் இவர்..!

என் மூத்த புள்ள வருண் எங்கே? வருணின் அம்மாவுக்கு பழைய ஞாபகம் எல்லாம் வந்துடுச்சே.! 3

விளம்பரம்

வருணின் தந்தை மனோகரும் அவரது தம்பி தருணும் தொடர்ந்து பழைய நினைவுகளை பேசி அவரை மீண்டும் பழைய மாதிரி கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். அதற்கு பலனளித்துள்ளது. இன்றைய எபிசோடில் தருணின் சிறு வயது புகைப்படத்தை எடுத்துக் கொண்டு வரும் வருணின் தாய் கஸ்தூரி இது நீயா? எப்போ வளர்ந்த என்றும் கேட்கிறார். மேலும் உன் அண்ணன் வருண் எங்கே? என்றும் கேட்கிறார். இதனால் அவருக்கு பழைய நினைவுகள் அனைத்தும் திரும்பி விட்டதாக தெரிகிறது. தனது தாயை சந்திக்கும் வருணும் விரைவில் குணமடைந்து மீண்டும் சக்தியுடன் இணைந்து வாழ்வார் என்று தெரிகிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the below video..!

விளம்பரம்

 

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment