விஜய் டிவி நாஞ்சில் விஜயனை அதிரடியாக கைது செய்தது காவல் துறை.! இதுதான் காரணமா?

விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் தற்போது கைது செய்யப்பட்டுள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிச்சா போச்சு என்கிற நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர். நாகர்கோவிலை பூர்வமாக கொண்ட இவர் விஜய் டிவியில் வேலை பார்த்து வருகிறார். சிரிச்சா போச்சு என்ற நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு காமெடி செய்து வந்த இவர், தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு வனிதா மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்த போது அதை விமர்சித்து வந்தார். அப்போது டிக்டாக்கில் சூர்யா தேவி என்ற பெண்ணும் வனிதாவை அவதூறாக பேசி வந்தார். இந்த நிலையில் இருவரும் சேர்ந்து வனிதாவை தொடர்ந்து அவதூறு பேசி வந்தனர். ஒரு கட்டத்தில் வனிதாவிற்கு ஆதரவாக மாறினார் நாஞ்சில் விஜயன். இதனால் வனிதா சூர்யா தேவி மீது மட்டும் புகார் கொடுத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவி நாஞ்சில் விஜயனை அதிரடியாக கைது செய்தது காவல் துறை.! இதுதான் காரணமா? 1
வனிதா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சூர்யா தேவி கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் சூர்யா தேவி தான் வசித்து வரும் வீட்டிற்கு ஆட்களை அனுப்பி தன்னை தாக்கியதாக நாஞ்சில் விஜயன் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து சூர்யா தேவி மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். அப்போது பேசிய சூர்யா தேவி தானும் நாஞ்சில் விஜயனும் ஏறத்தாழ ஆறு வருடங்களாக நண்பர்களாக பழகி வருகிறோம். நடிகை வனிதாவிற்கு எதிராக youtube-ல் கருத்து பதிவிட்ட போது தனக்கு ஆதரவாக இருந்து வந்த நாஞ்சில் விஜயன் தற்போது வனிதாவுடன் சமரசம் செய்து கொண்டார். இதனால் தமக்கு ஆத்திரம் ஏற்பட்டதாகவும் அது குறித்து விளக்கம் கேட்பதற்காகவும் தாம் நாஞ்சில் விஜயனின் வீட்டிற்கு சென்றாகவும் சூர்யா தேவி பேசினார்.

விளம்பரம்
தொடர்புடையவை  திடீரென முடிவுக்கு வந்த 'காற்றுக்கென்ன வேலி' சீரியல்.! மகாநதி சீரியலுக்கு தாவிய ஹீரோ சுவாமிநாதன்.!

விஜய் டிவி நாஞ்சில் விஜயனை அதிரடியாக கைது செய்தது காவல் துறை.! இதுதான் காரணமா? 3
அப்போது நாஞ்சில் விஜயன் என்னை தகாத வார்த்தைகளில் பேசி உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினார். அதனால் என் மண்டை உடைந்தது என்று நாஞ்சில் விஜயின் மீது சூர்யா தேவி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பல்வேறு சம்மன்கள் அனுப்பப்பட்ட நிலையில் நாஞ்சில் விஜயன் ஆஜராகாததால் இன்று வளசரவாக்கம் போலீசார் அவரை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் இவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த செய்தியை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

விளம்பரம்

 

Youtube Video Code Embed Credits: Thanthi TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment