விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் ராஜா ராணி. இந்த நாடகத்தின் பாகம் 1 மிகப்பெரிய வெற்றி அடைந்ததன் காரணமாக பாகம் 2 எடுக்கப்பட்டு வருகிறது. போலீஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்ற மருமகளின் கனவை மாமியார் எப்படி நிறைவேற்றப் போகிறார்? அதற்கு கணவர் எப்படி உறுதுணையாக இருக்கப் போகிறார்? என்பது பற்றிய கதை. இது ஹிந்தி நாடகம் ஒன்றின் தமிழ் ரீமேக்கான என் கணவர் என் தோழர் என்ற கதையை அப்படியே காப்பி அடித்து எடுக்கப்பட்டதாகும். ஆனால் அந்த நாடகத்தில் மாமியார் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ள மாட்டார். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் மாமியார் மருமகளை மிகக் கொடுமை செய்வது போல் காட்டப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எதற்கெடுத்தாலும் அதற்கு தனது மருமகள் சந்தியா தான் காரணம் என்று அவர் கூறும் வசனம் சிலரை எரிச்சல் அடையவும் வைத்திருக்கிறது. தற்போது பல தடைகளைத் தாண்டி சந்தியா போலீஸ் அதிகாரியாக ட்ரைனிங்க்கு சென்று இருக்கிறார். அங்கும் அவருக்கு பல தடைகள் ஏற்படுகிறது. அதை எல்லாம் மீறி அவர் போலீஸ் அதிகாரியாக ஆவாரா? இல்லையா? என்பது குறித்த கதை தான் ராஜா ராணி சீசன் 2. தற்போது சந்தியாவின் மாமியார் சிவகாமியின் மாற்றம் பலருக்கும் ஆறுதலை கொடுத்திருக்கிறது. அவர் தனது மருமகள் சந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கோவிலில் அமர்ந்து கொட்டும் மழையில் வேண்டிக் கொண்டிருக்கிறார். இந்த மாற்றம் பலருக்கும் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. விரைவில் சந்தியா போலீஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்பதுதான் பலரின் எண்ணம்.

இது ஒரு புறம் இருக்க தற்போது சந்தியாவின் கணவர் சரவணன் நடத்தி வரும் இனிப்பு கடையில் கலப்படம் இருப்பதாக கூறி கடைக்கு அதிகாரிகள் வந்து சீல் வைத்து விட்டனர். இதனால் சரவணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதை அறிந்து கொண்ட ஊர் பொதுமக்கள் நாங்கள் இத்தனை ஆண்டுகளாக சரவணன் கடையில் தான் இனிப்புகள் வாங்குகிறோம். அதில் எந்த கலப்படமும் இல்லை சரவணனை விடுதலை செய்யுங்கள் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை பார்த்த ரசிகர்கள் எந்த ஊருலடா ஸ்வீட் கடைக்காக மக்கள் வந்து போராடுறாங்க? சீரியலா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா என்று சொல்லி கலாய்த்து வருகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Vijay Television