உலக அளவில் 3000 கோடி வசூலை நெருங்கும் அவதார் 2.! இந்தியாவில் மட்டும் எவ்வளவு தெரியுமா?

அவதார் திரைப்படம் பார்ட் 2 உலக அளவில் வசூலை குவித்து வருகிறது. இன்று வரை 1500 கோடி வரை வசூலை குவித்து இருப்பதாகவும் இன்றும் விடுமுறை தினமும் என்பதால் இன்றைய தினம் சேர்த்து 3000 கோடியை நெருங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஹாலிவுட்டின் மிகப் பிரம்மாண்ட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் அவதார் 2. 2009ஆம் ஆண்டு வெளியான இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தில் முதல் பாகம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் செலவு செய்து இயக்கியிருந்தார்கள். உலக அளவில் இந்த படம் 280 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் யாரும் நெருங்க முடியாத சாதனையை நிகழ்த்தி இருந்தது. 13 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது.

உலக அளவில் 3000 கோடி வசூலை நெருங்கும் அவதார் 2.! இந்தியாவில் மட்டும் எவ்வளவு தெரியுமா? 1
முதல் பாகம் கொடுத்து வெற்றியால் இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது. சுமார் 160 மொழிகளில் இந்த படம் இரண்டு நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. தி வே ஆஃப் வாட்டர் என்று கடலை மையப்படுத்தி இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் ட்ரெய்லர் டீசர் என்று அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இரண்டு நாட்கள் முடிவில் படம் 1500 கோடி அளவில் வசூலை குவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் பன்னிரண்டாயிரம் திரையரங்குகளில் படம் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் அவதார் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. சிலர் முதல் பாகத்தை ஒப்பிடும்போது இரண்டாம் பாகம் அவ்வளவாக எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று விமர்சனங்களை தெரிவித்து இருந்தனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  "இளையராஜா என்னும் நான்"!! தமிழில் பதவியேற்ற இசைஞானி"!!

உலக அளவில் 3000 கோடி வசூலை நெருங்கும் அவதார் 2.! இந்தியாவில் மட்டும் எவ்வளவு தெரியுமா? 3

தற்போது இந்தியாவில் மட்டும் அவதார் இரண்டாம் பாகம் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. படம் வெளியான முதல் நாள் வெள்ளிக்கிழமையன்று 40.5 கோடி ரூபாயும், இரண்டாம் நாள் 80 கோடி வசூலையும் பெற்று இருப்பதாக தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமையான இன்றுடன் சேர்ந்து மூன்றாவது நாள் முடிவில் சுமார் 125 கோடியை இந்தியாவில் மட்டும் அவதார் வசூலிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் அதிக திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்பட்டுள்ளது. ஹிந்தி வட்டாரங்களில் முன்னணி நடிகர்களுக்கு இணையான வரவேற்பை இந்த படம் பெற்றிருக்கிறது.

விளம்பரம்

உலக அளவில் 3000 கோடி வசூலை நெருங்கும் அவதார் 2.! இந்தியாவில் மட்டும் எவ்வளவு தெரியுமா? 5 உலக அளவில் 3000 கோடி வசூலை நெருங்கும் அவதார் 2.! இந்தியாவில் மட்டும் எவ்வளவு தெரியுமா? 7
உலக அளவில் இரண்டு நாட்களில் இந்த படம் 1500 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்திருக்கிறது. இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்றைய வசூலையும் சேர்த்து உலக அளவில் இந்த படம் 3000 கோடி வசூலை தாண்டும் என்று சினிமா வர்த்தகர்கள் கணித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் வேறு எந்த படமும் திரையிடப்படாத காரணத்தினால் அவதார் 2 படத்தின் வசூல் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளையும் குடும்ப ரசிகர்களையும் இந்த படம் வெகுவாக கவர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விளம்பரம்

Leave a Comment