BiggBoss-ல் இருந்து வந்த பின்னர் ஜனனி நடத்திய முதல் போட்டோஷூட்.! குவியும் லைக்குகள்.!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் போட்டோஷூட் நடத்தி அதை ஜனனி தனது instagram பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். பிக்பாஸில் இலங்கை சேர்ந்தவர்களை கலந்து கொள்ள வைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் சீசன் 3-ல் லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகிய இருவரை களம் இறக்கி இருந்தார்கள். அதே போல் சீசன் 5ல் மதுமிதாவை களம் இறக்கி இருந்தார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

BiggBoss-ல் இருந்து வந்த பின்னர் ஜனனி நடத்திய முதல் போட்டோஷூட்.! குவியும் லைக்குகள்.! 1

விளம்பரம்

அந்த வகையில் சீசன் 6 தொடங்கியது முதல் இலங்கையைச் சேர்ந்த யாராவது ஒருவரை களம் இறக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜனனியை களம் இறக்கி இருந்தார்கள். ஜனனி இலங்கையில் இருக்கும் தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் மற்றும் செய்தி வாசிப்பாளராகவும் இருந்து வந்தார்.

BiggBoss-ல் இருந்து வந்த பின்னர் ஜனனி நடத்திய முதல் போட்டோஷூட்.! குவியும் லைக்குகள்.! 3

விளம்பரம்

நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த போதே சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் ஜனனி தொடர்ந்து டிக் டாக் செய்து அந்த வீடியோக்களை இணையதளத்தில் பகிர்ந்து வந்தார். ஜனனிக்கு சுமார் ரெண்டு லட்சம் பின்தொடர்பவர்கள் இன்ஸ்டாகிராமில் இருக்கிறார்கள். இந்த பிரபலத்தை கொண்டு இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 6ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். பொதுவாக இலங்கையைச் சேர்ந்த போட்டியாளர்களுக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு தனி இடம் உண்டு. அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று பலரும் நினைத்தது உண்டு. அந்த வகையில் லாஸ்லியா தர்ஷன் அனைவருமே மக்கள் மனங்களில் இடம் பிடித்தார்கள்.

தொடர்புடையவை  எல்லாரையும் நீச்சல் குளத்தில் தூக்கி போட்டு விளையாடிய ஹவுஸ்மேட்ஸ்.! செம்ம ஜாலியான ப்ரோமோ

BiggBoss-ல் இருந்து வந்த பின்னர் ஜனனி நடத்திய முதல் போட்டோஷூட்.! குவியும் லைக்குகள்.! 5

விளம்பரம்

ஜனனியும் அது போல் ஆரம்பத்தில் தனது அழகான தமிழால் பலரை கவர்ந்தார். இருந்தபோதிலும் என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆட்டத்தில் சுணக்கம் காட்டி வந்தார். குறிப்பாக அமுதவாணன் உடன் அவர் நேரத்தை செலவிட்டு விளையாட்டில் ஆர்வம் காட்டாமல் வந்தார். அமுதவாணன் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக பல இடங்களில் அவர் விட்டும் கொடுத்தார். இதனால் ரசிகர்கள் அனைவரும் ஜனனிக்கு குறைந்த வாக்குகளை அளித்து அவரை தற்போது வீட்டில் இருந்து வெளியேற்றி இருக்கின்றனர். வெளியே வந்த அவர் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போனதற்காக மன்னிப்பு கோரி இருந்தார்.

BiggBoss-ல் இருந்து வந்த பின்னர் ஜனனி நடத்திய முதல் போட்டோஷூட்.! குவியும் லைக்குகள்.! 7

விளம்பரம்

இந்த நிலையில் அவர் முதல் முறையாக போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பிங்க் மற்றும் வைலெட் நிற பாவாடை தாவணியில் செம்ம cute ஆக இருக்கிறார் ஜனனி. அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment